Saturday, January 19, 2013

நெல்லை பகுதி கோவில்களில் கந்தசஷ்டியை முன்னிட்டு சூரசம்ஹாரம் நடந்தது.


நெல்லை பகுதி கோவில்களில் கந்தசஷ்டியை முன்னிட்டு சூரசம்ஹாரம் நடந்தது.

குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி கோவில்:

திருவாவடுதுறை ஆதீனத்துக்கு சொந்தமான குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா கடந்த 13ம் தேதி துவங்கியது. தொடர்ந்து 6 நாட்கள் காலையில் யாகசாலை பூஜை, சுவாமிக்கு அபிஷேகம், அலங்கார, தீபாராதனை, மாலையில் சுவாமி வீதியுலா நடந்தது.நேற்று மாலை 4 மணிக்கு சுப்பிரமணிய சுவாமி போர்க்கோலத்துடன் கோயிலில் இருந்து புறப்பட்டார். டவுன் ரோடு, கோவில் ரோடு, ஆற்றங்கரையில் சூரபத்மனுடன் சுப்பிரமணியர் போரிட்டு சம்ஹாரம் செய்தார். சுற்றுப்பகுதி பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். இன்று காலை 10 மணிக்கு சி.என்.கிராமத்தில் தபசுக்காட்சி, இரவு 7 மணிக்கு கோவிலில் சுப்பிரமணியர், தெய்வானை திருக்கல்யாணம் நடக்கிறது.

சாலைக்குமாரசுவாமி:

நெல்லை ஜங்ஷன் பாளையஞ்சாலைக்குமாரசுவாமி கோவிலில் கடந்த 13ம் தேதி கந்தசஷ்டி விழா துவங்கியது. தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு பூஜைகள், ஆன்மீக சொற்பொழிவுகள், திருமுறை விண்ணப்பம் நடந்தது. நேற்று காலையில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை, மாலையில் சண்முகார்ச்சனை, அலங்கார தீபாராதனை நடந்தது.
மாலை 6.01 மணிக்கு சூரசம்ஹாரம் துவங்கியது. ரயில்வே ஸ்டேஷன் ரோடு, சிந்துபூந்துறை சிவன் கோவில் அருகே, செல்வியம்மன் கோவில் அருகே, மேகலிங்கபுரத்தில் சுப்பிரமணியர் சூரபத்மனை வதம் செய்தார். சுற்றுப்பகுதி மக்கள் தரிசனம் செய்தனர்.இன்று காலை கோவிலில் அம்பாள் தபசுக்காட்சிக்கு எழுந்தருளல், கும்பபூஜை, ஹோமம், சிறப்பு அபிஷேகம், மாலையில் சுவாமி காட்சியளித்தல், இரவு 10 மணிக்கு மேல் திருக்கல்யாணம் நடக்கிறது. 20, 21, 22ம் தேதிகளில் காலை 10.30 மணிக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை, இரவு 7.30 மணிக்கு ஊஞ்சல் விழா, 23ம் தேதி காலை 9 மணிக்கு சுவாமி, அம்பாள் தீர்த்தவாரி நடக்கிறது. நெல்லையப்பர் கோவில் சார்பிலும் கந்தசஷ்டி சூரசம்ஹாரம் நடந்தது.


பாளை., பகுதி


பாளை. மேலவாசல் சுப்பிரமணிய சுவாமி கோவில் கந்தசஷ்டியை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடந்தது. பாளை. சிவன் கோவிலில் காலையில் சுப்பிரமணியருக்கு சிறப்புபூஜைகள் நடந்தது. மாலையில் 6.30 மணிக்கு சுப்பிரமணியர் சூரசம்ஹாரத்திற்கு எழுந்தருளினார்.காவில் முன்பு, சிவன் தெற்கு ரதவீதி, தெற்கு பஜார், முத்தாரம்மன் கோவில், மேலவாசல், கோபாலசுவாமி கோவில் அருகே சூரபத்மனை சுப்பிரமணியர் வதம் செய்தார். ஏராளமானோர் கலந்து கொண்டனர். இன்று திருக்கல்யாணம் நடக்கிறது. என்.ஜி.ஓ., ஏ காலனி வரசித்தி விநாயகர், பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் சூரசம்ஹாரம் நடந்தது.நெல்லை சுற்றுப்பகுதி கோவில்களில் கந்தசஷ்டியை முன்னிட்டு முருகன் சந்நிதிகளில் நேற்று காலையில் சிறப்புபூஜை, மாலையில் சூரசம்ஹாரம் நடந்தது. சூரசம்ஹாரம் நிறைவு பெற்றதும் பக்தர்கள் விரதத்தை முடித்துக்கொண்டனர்.

நன்றி : தினமலர்

No comments:

Post a Comment