ஆண்ட்ராய்ட்:
தற்போது வளர்ந்துவரும் தொழில்நுட்பத்துறையில் மிகவும் முன்னணியில் இருப்பது மொபைல்துறை என்றால் அது மிகையாகாது.
எத்தனையோ வித்தைகளை இணையத்தில் செய்து தற்போது முன்னணயில் இருக்கும் கூகிள் நிறுவனம் தனது மற்றொரு அத்தியாயமாக இந்த ஆன்ட்ராய்ட் எனும் இயங்குதளத்தை உருவாக்கி, அதை மொபைல் பயன்பாட்டுக்கென வெளியிட்டு, தானும் மொபைல் சந்தையில் நுழைந்தது.
கடந்த நவம்பர் 5 ஆம் நாளுடன், ஆண்ட்ராய்ட் அறிமுகமாகி ஐந்து ஆண்டுகள் முடிகின்றன. லினக்ஸ் அடிப்படையில், ஸ்மார்ட் போன்களில் பயன்படுத்தும் சிஸ்டமாக, ஆண்ட்ராய்ட் அறிமுகம் செய்யப்பட்டது. பின் தொழில்நுட்ப உலகில் முதல் இடத்தை பிடித்தது.
முதல் இடத்தைப் பிடித்த ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தின் வளர்ச்சியை இங்கு பார்க்கலாம்.
ஆண்ட்ராய்ட் (Android 1.0):
அமெரிக்க நாட்டில் மிகவும் பிரபலமான எச்.டி.சி. ட்ரீம் போனில் இது முதலில் இயங்கியது.இன்றைக்கு இயக்கத்தில் இருக்கும் அண்மைக் காலத்திய
ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தின் தொடக்க நிலை இதுதான் என்று சொன்னால், யாரும் நம்பமாட்டார்கள்.சிறிது கூட இன்றைய ஆண்ட்ராய்ச் சிஸ்டத்தின் சாயல் இதில் இருந்ததில்லை. செப்டம்பர் 2008ல்
இது வெளியானது.
கப் கேக்ஸ் அவே (Cupcakes away 1.5):
நல்ல விருந்திற்குப் பின்னர்
சாப்பிடும் இனிப்பு மற்றும் ஐஸ்கிரீம் கலந்த பழக் கூட்டை டெசர்ட் (Dessert) என ஆங்கிலத்தில்
அழைப்பார்கள். ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தின் பெயர்கள் எல்லாம், இவற்றின் பெயரிலேயே அமைக்கப்பட்டு
வருகின்றன. இதன் தொடக்கம் ""கப் கேக்ஸ் அவே'' என ஆரம்பமானது. ஏப்ரல் 2009ல் வெளியானது.
டோனட் :
திரைக் காட்சியில் கூடுதல் பிக்ஸெல் ரெசல்யூசன், மொபைல் டேட்டா பயன்பாட்டில்
கூடுதல் திறன், வைபி இணைப்பு மற்றும் பல மேம்படுத்தல்களை இது கொண்டிருந்தது.
செப்டம்பர் 2009ல் இது புழக்கத்திற்கு அறிமுகமானது.
எக்ளெர் :
தன் ஆண்ட்ராய்ட் வரிசையின் அடுத்த சிஸ்டத்தில்,
அதிகமான மாற்றங்களை மேற்கொண்டதால், இந்த பதிப்பின்
எண் 2க்குச் சென்றது. டோனட் வெளியாகி, ஒரு மாதத்தில்
அக்டோபர் 2009ல் இது வெளியானது. இதன் மூலம் ஆண்ட்ராய்ட்
சிஸ்டத்திற்கு பரவலான இடம் கிடைக்கத் தொடங்கியது.
ப்ரையோ:
இந்த பதிப்பு மே, 2010ல் வெளியானது. இதன் பல முக்கிய அம்சங்களில்,
பிளாஷ் சப்போர்ட், யு.எஸ்.பி. போர்ட் மற்றும் வைபி ஹாட் ஸ்பாட் சப்போர்ட்
ஆகியவற்றைக் கூறலாம். பல செயல் இயக்கங்களின் திறன் கூடுதலாக அமைக்கப்பட்டது.
ஜிஞ்சர் ப்ரெட்
டிசம்பர், 2010ல் வெளியான ஜிஞ்சர் ப்ரெட் சிஸ்டம், முழுமையும் திறன் மாற்றப்பட்ட ஆண்ட்ராய்ட் சிஸ்டமாக இருந்தது.
அண்மைக் கள தகவல் தொடர்பு(near field communication) இணைக்கப்பட்டது. இப்போது கூட ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தில்
இயங்கும் பெருவாரியான சாதனங்களில், ஜிஞ்சர் ப்ரெட் சிஸ்டம் தான் இயங்குகிறது.
ஹணி கோம்ப் :
இதனை ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தின் புதிய பதிப்பு என்று முழுமையாகக் கூற முடியாது.
ஆனால் சிஸ்டத்தினை டேப்ளட் பிசியில் இயங்கும் வகையில் மாற்றி அளித்தது கூகுள்.
இதன் ஹோலோ (“Holo”) யூசர் இன்டர்பேஸ் சற்று மெருகூட்டப்பட்டு கிடைத்தது.
இதுதான் இன்றும் ஆண்ட்ராய்ட் பதிப்பின் அடிப்படை தொடக்கமாக இருந்து வருகிறது.
இந்த பதிப்பு, 2011ல் பிப்ரவரியில் வெளியானது.
>ஐஸ்கிரீம் சாண்ட்விச் (Icecream Sandwich 4.0):
அக்டோபர், 2011ல் வெளியான இந்த சிஸ்டம், கூகுள் டேப்ளட் பிசி மற்றும் ஸ்மார்ட் போன் ஆகிய இரண்டின் இயக்கங்களை
ஒருமுகப்படுத்தியது. இன்டர்பேஸ் முழுவதுமாக மாற்றி அமைக்கப்பட்டது.
பல புதிய வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டன. அவற்றில் 1080p video recording, face unlock, மற்றும் Chrome browser
ஆகியவற்றைக் குறிப்பிடலாம்.
ஜெல்லி பீன் (Jelly Bean4.1):
சென்ற சில மாதங்களுக்கு முன் வந்த ஜெல்லி பீன், கூகுள் பயனாளர்களின் பயன்பாட்டினை மட்டுமே,
தன் முக்கிய நோக்கமாகக் கொண்டிருப்பதனை நிலைநாட்டியது.
Project Butter என்ற பெயரில், சிஸ்டம் செயல்பாட்டினை மந்தப்படுத்திய சில சிறிய தவறுகளைச் சரி செய்தது.
குறிப்பிட்ட சில வகை தகவல்களை, வகைப்படுத்தி தேடித் தரும் “cards” என்பவை இதில் தான் அறிமுகம் செய்யப்பட்டன.
கீ லைம் பை (Key Lime Pie (?)):
விரைவில் வெளியிடப்பட இருப்பதாக, பெரிய அளவில் பேசப்படும் ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தின் 4.2 பதிப்பு. இது முந்தையவற்றின் மேம்பாட்டு பதிப்பாக இருக்குமா அல்லது முற்றிலும் புதிய பதிப்பாக இருக்குமா எனத் தெரியவில்லை.
ஆனால், ஆண்ட்ராய்ட் பயன்படுத்துபவர்கள் அனைவரும், இது நிச்சயம் முற்றிலும் புதிய பதிப்பாக இருக்கும் என்றே எதிர்பார்க்கின்றனர்.

No comments:
Post a Comment