பணகுடி:
-----------
பணகுடி திருநெல்வேலி மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். காசி முதல் கன்னியாகுமரி வரை உள்ள தேசிய நெடுஞ்சாலையின் கன்னியாகுமரிக்கு வடக்கே 30கி.மீ தொலைவிலும் திருநெல்வேலியில் இருந்து 52கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது.பணகுடியிலும் அதன் சுற்று புறங்களிலும் ‘பாணர்கள்’ அதிகமாக வாழ்ந்த காரணத்தால் இவ்வூர் “பாணர்குடி” என்று அழைக்கப்பட்டது. பின்னர் “பணகுடி” என்றாயிற்று என்பார்கள்.இன்னொரு சாரார் பனைமரக்காடுகள் அதிகமாக இருந்த காரணத்தால் பனைத்தொழில் இப்பகுதியில் சிறந்து விளங்கியது என்றும் அதனால் ‘பனைக்குடி’ என்று அழைக்கப்பட்டு பின்னர் “பணகுடி” என்று மருவியதாகவும் கருதுகிறார்கள். பணகுடியில் இந்துக்கள், கிறித்தவர்கள் மற்றும் முஸ்லிம்கள் போன்ற மதத்தை சார்ந்த, வெவ்வேறு பிரிவைச் சேர்ந்த மக்கள் வாழ்ந்து வருகிறார்கள்.
பணகுடி இசையின் பிறப்பிடம் என்று கூறலாம். இங்கு தயாரிக்கப்படும் ஆர்மொனிய பெட்டிகளுக்கு மவுசு அதிகம்.
பணகுடியில் முக்கியத் தொழில் வேளாண்மை. பணகுடியில் ஆற்று நீர்ப்பாசனம், குளத்து நீர்ப்பாசனம் முறையிலும் விவசாயம் செய்தனர். இங்கு நெற்பயிர் அதிகம் விளைச்சல் ஆகிறது. மேலும் இப்பகுதியில் சோளம், கேழ்வரகு, மிளகு, தென்னை, காய்கறி, வாழை, பனை போன்றவையும் பயிரிடப்படுகிறது.
பணகுடியை பொறுத்தவரையில் தொழில்களும் சிறப்பாக நடைபெறுகின்றது. பணகுடியில் உள்ள அதிகமான பெண்கள் பீடி சுற்றுகிறார்கள். மேலும் கூடை முடைதல், சுருட்டு சுற்றுதல், செங்கல் உற்பத்தி செய்தல், ஓடு தொழிற்சாலைகள் போன்ற தொழில்களும் சிறப்பான முறையில் நடைபெற்று வருகிறது. இங்கு ஏராளமான ஒடுகள் மற்றும் செங்கல் தயாரிக்கப்பட்டு வெளியிடங்களுக்கும் வெளியூர்களுக்கும் வேறு மாநிலங்களுக்கும் அனுப்பப்படுகிறது.
சிறுதொழில்களாக தங்க நகை செய்தல், மரச்சாமான்கள் செய்தல், தட்டச்சு மண்பானை செய்தல் போன்ற தொழில்கள் நடைபெறுகின்றது. பணகுடியில் சர்வோதய சங்கம் சிறப்பு பெற்றதாகக் காணப்படுகிறது. இங்கு மரச்சாமன்கள், சோப்பு, செருப்பு, தேன், ஊதுபத்திகள், தலையனை போன்ற இதர பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன.
இங்கு மகேந்திரகிரி மலை உள்ளது. மேற்குதொடர்ச்சி மலையின் ஒரு பகுதி தான் மகேந்திரகிரி மலை. இந்த மலையில் பல்வேறு வகையான புண்ணிய தீர்த்தங்கள்,புண்ணிய பாதங்கள் இருக்கின்றன. இம்மலையில் சித்தர்கள் இன்றும் பவனி வருகின்றார்கள் என்று கூறுகின்றார்கள்.
பணகுடியில் மிகப் பெரிய சந்தை உள்ளது. இச்சந்தை மையப்பகுதியில் அமைந்துள்ளதால் சுற்று வட்டார ஊர்களான வடக்கன்குளம், கும்பிளம்பாடு, கலந்தபனை, பாம்பன்குளம், ரோஸ்மியாபுரம், தளவாய்புரம் போன்ற இடங்களில் இருந்து மக்கள் வந்து பொருட்களை வாங்கிச் செல்கின்றார்கள்.
பணகுடி மலையிலிருந்து உற்பத்தி ஆகும் நதி அனுமான் நதி ஆகும். இந்த அனுமான் நதி நீர் பணகுடியின் விவசாயத்திற்கு பயன்படுத்தபடுகிறது. அனுமான் நதியின் ஆற்று நீர் தண்டையார்குளம், பெருங்குடி, சாத்தான்குளம், வெப்பிலாங்குளம், போன்ற சுற்றியுள்ள ஊர்களுக்கு பாய்கிறது. பின்னர் இராதாபுரம் செட்டிகுளம் வழியாக வங்காள விரிகுடா கடலில் கலக்கிறது.
இந்தியாவில் மிக முக்கியமான வைஷ்ணவ கோவிலான ஸ்ரீஇராமலிங்கசுவாமி சிவகாமி அம்பாள் திருகோவில் பணகுடியில் தான் உள்ளது. மேலும் இங்கு புனித சூசையப்பர் திருத்தலம் உள்ளது.

No comments:
Post a Comment