வாசுதேவநல்லூர்:
வாசுதேவநல்லூர் திருநெல்வேலி மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். மதுரை செங்கோட்டை முக்கியசாலையில் அமைந்திருப்பதால் மதுரை, தென்காசி, செங்கோட்டைக்கு நிமிட இடைவெளியில் பேருந்துகள் உள்ளன.
இந்நகரின் அருகில் சுமார் 8 கி.மீ தொலைவில் உள்ள "தலையணை" எனப்படும் பகுதி ஒரு சிறந்த சுற்றுலா தலமாகும். வனமும் அருவியும் ஆறும் தலையணையை சிறப்பூட்டுகின்றன. வருடத்தின் அனைத்து நாட்களிலும் நீரோட்டம் உள்ள தலையணைக்கு அருகிலுள்ள ஊர்களிலிருந்து சுற்றுலாவாக மக்கள் வருகின்றனர். இப்பகுதியில் "மலைவாழ் மக்கள் குடியிருப்பு' உள்ளது. வாசுதேவநல்லூர் பேரூராட்சி மூலமாக மலை வாழ் மக்களுக்காக 19 குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகிறது.
வாசுதேவநல்லூர் உள்ள கோவில்களில் சில அருள்மிகு சிந்தாமணிநாத சுவாமி திருக்கோவில் (தமிழ்நாட்டிலேயே மூலவராக "அர்த்தநாரீஸ்வரர்" உள்ள ஒரே தலம்), அருள்மிகு வெங்கடாசலபதி திருக்கோவில், அருள்மிகு மாரியம்மன் திருக்கோவில் என்பவைகள் ஆகும்.
இதன் அருகில்தான் சுதந்திர போராட்டத்திற்கு முதல் முழக்கமிட்ட "பூலித்தேவன்" ஆண்ட நெல்கட்டும் செவல் உள்ளது. 1998ம் ஆண்டு டிசம்பர் மாதம் தமிழக முதல்வரால் மாண்புமிகு மு.கருணாநிதி அவர்களால் பூலித்தேவன் அரண்மனை பழமைமாறாமல் புதிப்பிக்கப்பட்டு சுற்றுலாத்தலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.[5]
பூலித்தேவரும் கான்சாகிப் என்ற மருதநாயகமும் போரிட்ட பகுதி இன்றைய வாசுதேவநல்லூர் பேரூந்து நிலையத்தை ஒட்டிய மந்தை பகுதியாகும்.
வாசுதேவநல்லூரைச் சேர்ந்த Dr.M.காந்தி என்பவர் Permanent Mission of India என்னும் அமைப்பில் நான்கு ஆண்டுகள் அமெரிக்க ஐக்கிய நாடுகளில் பணியாற்றினார். தற்போது அவர் குடும்பத்துடன் புது தில்லியில் சட்ட மற்றும் உடன்படிக்கைகள் பிரிவில் Ministry of External Affairs (India) என்பதில் பணிபுரிகிறார். மேலும் நடிகரும் இயக்குனருமான எஸ்.ஜே.சூர்யா வாசுதேவநல்லூரைச் சேர்ந்தவர்.

No comments:
Post a Comment