Thursday, January 17, 2013

வன்னியப்பர் திருக்கோயில்


நாம் இன்று வன்னியப்பர் திருக்கோயில் பற்றி சில தகவல்களை காண்போம் ....

இக்-கோயில் திருநெல்வேலி மாவட்டம் ஆழ்வார்குறிச்சியில் அமைந்துள்ளது. இந்த ஆலயம் மிகவும் பழமையானது. இங்கு எளுந்தரிளியுள்ள இறைவன் பெயர் வன்னியப்பர் , தாயார் சிவகாமிசுந்தரி ஆகும். இக்-கோயிலைச் சுற்றியும் பஞ்சகுரோச தலங்கள் உள்ளன. பாப்பான்குளம் ராமேஸ்வரர், பாபநாசம் பாபநாச நாதர், திருவாலீஸ்வரம் திருவாலீஸ்வர நாதர், சிவசைலம் சிவசைலப்பர்,ஆழ்வார்குறிச்சி வன்னீஸ்வரர் கோயில் ஆகியவை பஞ்சகுரோச தலங்கள் ஆகும். இங்கு சிவசன்னதி முன்புள்ள மண்டபக் கூரையில் யந்திர வடிவில் நவக்கிரகங்கள் அருள்பாலிக்கின்றன.இவ்வாறு அமைந்துள்ளது தனிச் சிறப்பாகும். கரூவூர் சித்தர் ஒரு தூணில் நாயுடன் காட்சி தருகிறார்.

கோயிலுக்கு வெளியே சற்று தூரத்திலுள்ள அக்னி தீர்த்தத்தின் நீர், தீர்த்தத்திற்குள் அமைந்திருக்கும் சிவலிங்க மண்டபத்தை மூழ்கடித்தால் மழை பெய்யும் என்பது ஐதீகம். இத்தலத்தின் பின்னால் ஒரு சிறு கதை உள்ளது. ஒருமுறை சப்தரிஷிகள் யாகம் செய்தனர். அவர்களது யாக குண்டத்தில் எரிந்த நெருப்பு சரிவர எரியவில்லை. இதனால் அக்னி பகவானை ஒளியிழந்து போகுமாறு அந்த ரிஷிகள் சபித்தனர். தனது கடமையை சரிவர செய்யாமல், சாபத்திற்கு ஆளான அக்னி பகவான், மீண்டும் தனது பழைய நிலையை பெற சிவலிங்கம் ஸ்தாபித்து வழிபட்டார்.பூலோகத்தில் ஒரு நதியின் கரையில் அவர் இந்த பூஜையை செய்து வந்தார். இங்கு சிவபெருமான் அவருக்கு காட்சியளித்து மீண்டும் ஒளி தந்தார் என்பதாகும் .சீதாதேவியின் கற்பை நிரூபிக்க தான் உதவியதால், தான் தவமிருந்த இடத்தில் ஓடிய நதிக்கு அவளது கணவரான ராமனின் பெயரை வைத்தார். அது "ராமநதி' எனப்பெயர் பெற்றது.

Source: Dinamalar

No comments:

Post a Comment