Thursday, January 17, 2013

என்ன ஒரு விந்தை! ..... காரை இப்பொழுது மடித்து வைக்கலாம்!


என்ன ஒரு விந்தை! ..... காரை இப்பொழுது மடித்து வைக்கலாம்!
வாருங்கள் காண்போம் !....

ஆம் ஹிரிக்கோ என்ற ஸ்பெயின் நாட்டு நிறுவனம் இக்-காரை தயாரித்துள்ளது. நெருக்கம் மிகுந்த நகரங்கலில் வாகன ஓட்டுனர்களின் சந்திக்கும் பார்கிங் , நெரிசல் பிரச்னைகளைத் தீர்க்க வேண்டும்என்ற குறிக்கோளுடன் உருவானதுதான் ஹிரிக்கோ. இந்த வாகனம் தான் இந்த நிறுவனம் வெளியிட்டுள்ள முதல் மற்றும் ஒரே வாகனம் இதுதான். அதனால்தான் இந்தக் குட்டிக் காருக்கு ஹிரிக்கோ என்ற அந்நிறுவனத்தில் பெயரே சூட்டப்பட்டுள்ளது.இரண்டு பேர் பயணம் செய்யக்கூடிய இந்தக் கார், பேட்டரியில் இயங்குகிறது. ஒரு முறை சார்ஜ் செய்தால் 120 கிலோமீட்டர் வரை ஓடும். எந்த பேட்டரி காரும் எட்ட முடியாதபடி, மணிக்கு 100 கிலோமீட்டர் வேகம் வரை பறக்கும். எல்லாவற்றுக்கும் மேலாக டிரைவர் ஒரு பட்டனைத் தட்டினால் ஐந்தரை அடி நீளமே உள்ள இந்தக் கார் இரண்டாக மடிந்து, சுருங்கி, ஒரு டூவீலரின் பார்க்கிங் ஏரியாவுக்குள் அடங்கிவிடுகிறது.மேலும் இந்தக் காரை அப்படியே பக்கவாட்டில் 60 டிகிரி கோணத்தில் திருப்பி ஓட்ட முடியும்.

கார் மிகுதியாக நிறுத்தபட்டிருக்கும் தருணங்களில் அதை இயக்க ஒரு சிறு கணினியோடு இணைக்கப்பட்டுள்ளது. இதனால் நமது ஸ்மார்ட் போன் மூலமே இந்தக் காரை நகர்த்தலாம். நாம் வெளியே நின்று கொண்டு ஸ்மார்ட் போன் மூலமாக இதை எந்த பொந்துக்குள்ளும் பார்க் செய்திருந்தாலும் வெளியே எடுத்துவிட முடியும்.

No comments:

Post a Comment