பாய் என்றாலே நம் நினைவுக்கு வரும் ஊரு பத்தமடை , ஏன் அந்த பாயிற்கு அவ்வளவு சிறப்பு என்று வாருங்கள் காண்போம் ...
தாமிரபரணி ஆற்றங்கரையோரத்தில் வளரும் காய்ந்த கோரைப்புல் கொண்டு, பத்தமடை பாய்கள் பின்னப்படுகின்றன. பிற இடங்களைக் காட்டிலும், இங்கு வளரும் கோரைப் புல் நல்ல தரமானவை. இந்த அழகிய கோரைப் புல்லினால் நெய்யப்படும் பாய்கள் குறுக்கு இழை பருத்தி அல்லது பட்டினால் ஆன இழைகளால் நெய்யப்படுன்றன.பிற புற்களால் செய்யப்படும் பாய்களை விட, இவை மெல்லியதாகவும், மிருதாகவும் உள்ளன. இவை 140 இழை எண்ணிக்கை கொண்டுள்ளன. இந்த பாய்கள் தயாரிக்க பயன்படும் மூலப்பொருளான கோரைப் புற்கள் குளிர்ச்சியாக இருப்பதால் உடலுக்கு ஆரோக்கியத்தை தருகிறது.
தமிழர்களின் கை வண்ணத்தை பறைசாற்றும் பாரம்பரிய பொருட்கள் வரிசையில் இடம் பெற்றுள்ளது பத்தமடை பாய் மேலும் புவிசார் அந்தஸ்து வழங்க மும்பையில் உள்ள அறிவுசார் சொத்து உரிமை அமைப்பு முடிவு செய்துள்ளது. இதன் மூலம் இந்திய சந்தை உள்பட உலக சந்தையில் இந்த பொருட்களின் போலிகள் விற்பனை தடுக்கப்படும். அழகுணர்ச்சியுடன் கலைரச னையுடன் தயாரிக்கப்படும் பத்தமடை பாயின் புகழ் உலகம் முழுவதும் பரவியுள்ளது. இங்கிலாந்து ராணியாக எலிசபெத் முடிசூட்டிக் கொண்ட போது அவருக்கு இங்கிருந்து பத்தமடை பாய் பரிசாக அனுப்பி வைக்கப்பட்டது. ரஷ்ய அதிபர் மிகைல் கார்பசேவ் இந்தியா வந்த போது அவருக்கு பத்தமடை பாய் பரிசாக வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அனால் தற்போது பாய் தொழில் உற்பத்திக்கு பயன்படும் மூலப்பொருட்களின் விலை உயர்வு காரணமாக பாய் தொழில் நசிந்து விடுமோ என்ற எண்ணம் தோன்றுகிறது ....

No comments:
Post a Comment