நாங்குநேரி :
நாங்குநேரி இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருநெல்வேலி மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். நான்குநேரி என்று அழைக்கப்படும் இத்தலம் திருநெல்வேலி - நாகர்கோயில் மார்கத்தில் திருநெல்வேலியில் இருந்து 30 கி.மீ தொலைவில் உள்ளது. நெல்லை மாவட்டத்தின் தென்கோடியிலுள்ள இவ்வூரில் நல்ல மழை பொழிகிறது. நாங்குநேரி பச்சைப்பசேல் என வளமிக்க வயல்கள், பெரிய தண்ணீர் தொட்டி மற்றும் செழுமையான நிலம் சூழப்பட்டுள்ளது. இதன் மேற்கு பகுதியில் மேற்கு தொடர்ச்சி மலைகளும், வடக்கில் ஏற்வாடி எனும் ஊரும் உள்ளது. இந்நகர மக்கள் எளிய வாழ்க்கையினை வாழ்கின்றனர். இவ்வூர் 4 ஏரிகள்களால் சூழப்பட்டுள்ளது. எனவே இதன் பெயர் நான்கு+ ஏரி = நாங்குநேரி எனப்பட்டது.
மேலும் தென்கலை வைணவர்களுக்கு முக்கியமான 'வானமாமலை மடம்' இங்குள்ளது, இது வானமாமலை மடத்தின் தலைமைப் பீடம் ஆகும். இங்கு தெய்வநாயகன் - தோதாத்ரிநாதன் என்ற பெயரில் பெருமாள் வீற்றிருந்த திருக்கோலம் காணலாம், கிழக்கே திருமுகமண்டலம் உள்ளது. தாயாரின் பெயர் சிரீவரமங்கை என்பது ஆகும். இங்கு சித்திரை (ஏப்ரல் மே) மாதம் கொண்டாடப்படும் பிரமோட்ஸவம் கோவிலில் ஒரு முக்கியமான பண்டிகை ஆகும். இங்கு தினமும் 5 படி எண்ணெய்யால் திருமுழுக்கு செய்யப்படுகிறது. தோல் நோய்கள் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் உடலில் அபிஷேகம் செய்த எண்ணெய் தடவினால் குணமாகும்.
கிட்டத்தட்ட அனைத்து கோயில்களிலும், ஒரே ஒரு சுயம்புமுர்த்தி இருக்கும் ஆனால் நாங்குநேரியில் 11 சுயம்புமுர்த்திக்களாக ஸ்ரீ தேவி, பூதேவி , சூரியன், சந்திரன், ப்ருஹு ரிஷி, மார்கண்டேயன், ஊர்வசி, திலோத்தமா, கருடன் மற்றும் விஸ்வக்சேனர் உள்ளது இந்த கோவில் ஒரு தனிப்பட்ட அம்சம்.இங்கு தங்கத்தால் இழைக்கப்பட்ட மண்டபம், தூண்கள், நகைகள் காணத் தக்கவை. இங்கு தினமும் 5 படி எண்ணெய்யால் திருமுழுக்கு செய்யப்படுகிறது. எண்ணெய்யைச் சேர்க்கும் கிணறு 1800 ச.அடி உள்ளது. நம்மாழ்வாரால் பாடல்பெற்றது. இங்கு கத்தோலிக்கர்கள் அதிகம் வாழ்கின்றனர். இங்குள்ள இராசக்க மங்கலத்தில் கட்டடம் கட்டப் பயன்படும் கற்கள் வெட்டி எடுக்கப்படுகின்றன.

No comments:
Post a Comment