களக்காடு:-
களக்காடு, திருநெல்வேலி மாவட்டத்தில், மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள ஒரு பேரூராட்சி ஆகும். வள்ளியூரிலிருந்து 20 கி.மீ. தொலைவுவில் உள்ளது களக்காடு. திருநெல்வேலியிலிருந்து சேரன்மகாதேவி வழியாகவும் களக்காட்டிற்கு வரலாம். இயற்கை எழில் கொஞ்சும் அழகிய ஊர். எங்கள் ஊரைச் சுற்றி செங்கல்தேரி, கருங்கல்கசம் என்ற நீர்வீழ்ச்சிகளும், மலைப் பகுதி களும் உண்டு. சுற்றுப் புறம் முழுவதும் மலைகளும், நீர்வீழ்ச்சியும் உள்ளதால் குளிர்ந்த மலைக்காற்று ஊரையே குளிர்ச்சிப் படுத்தும். இந்த இயற்கைக் காற்றுக்கு எத்தனை ஏ.சி. வைத்தாலும் ஈடாகாது.
களா மரங்கள் நிறைந்த காடு; எனவே இப்பகுதி "களக்காடு" என்று பெயர் பெற்றது. முன்னொரு காலத்தில் 'களப்பிரர்கள்’ என்கிற இனத்தைச் சேர்ந்தவர்கள் இங்கு இருந்தபடி தமிழகத்தினை ஆட்சி செய்து வந்ததால் களக்காடு என்று பெயர் வந்ததாகக் கூறுவார்கள். இவ்வூர் பண்டை நாளில் 'திருக்களந்தை' என்று வழங்கப் பெற்றது. "களக்கோட்டை" என்றே இப்பகுதி அழைக்கப்பட்டதாக மன்னார்கோவில் கல்வெட்டு கூறுகிறது
இந்த ஊரின் பிரசித்தி பெற்ற உணவுப் பண்டம் அடைதான். அந்த அடையுடன் வெல்லத்தைச் சேர்ந்து எள்ளுப்பொடி தொட்டுச் சாப்பிட்டால் அவ்வளவு ருசியாக இருக்கும். இந்த ஊரில் வீடுகள் அமைந்து இருக்கும் கட்டமைப்பு மற்றொரு அழகு. அவ்வளவு நேர்த்தி யாகவும், அழகாகவும், வீட்டுக் கட்டமைப்புகள் இருக்கும்.
இந்த அடையாளமே கோயில்கள்தான். அதுவும் சத்தியவாகீஸ்வரர் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது.
சீதையின் பிரிவால் வருந்திய இராமனும், இலக்குவனனும் புன்னை மரத்தின் நிழலில் தங்கியிருந்த சிவபெருமானை வழிபட, அப்போது இறைவன் அவர்களுக்கு "சீதையை மீட்டுவர யாம் துணையிருப்போம்" என்று சத்திய வாக்கினை தந்தார். பின்னர் சீதைய மீட்டு வந்த இராமன், இத்தலத்திற்கு சீதை, இலக்குவனன் ஆகியோருடன் வந்து இறைவனுக்கு சத்தியவாகீசப் பெருமான் என நாமஞ் சூட்டி வணங்கிச் சென்றனர் என்பது தலவரலாறு.
ஒருமுறை, காசிப முனிவருக்கு பிள்ளைகளாகப் பிறந்த தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் யுத்தம் ஏற்பட்டது. தேவர்கள் சிவபெருமானிடம் தங்களைக் காக்குமாறு வேண்டி நின்றனர். இறைவனார் தேவர்களிடம் பொதிகைமலையின் தென்புறத்தில் தாம் எழுந்தருளியிருக்கும் களக்குடி சென்று தவஞ்செய்யுமாறு கூறினார். தேவர்களும் அவ்வாறே செய்தனர். பின்னர் தேவர்கள் அசுரர்களுடன் போர் புரிய, சிவபெருமான் தமது கணங்களுடன் தோன்றி அசுரர்களை அழித்து தேவர்களுக்கு வெற்றியை நல்கினார். இதன் காரணத்தினாலேயே தேவர்களின் வேண்டுகோளின்படி சிவபெருமானுக்கு "சத்தியவாகீசர், பொய்யாமொழியார்" என்றும், இப்பதிக்கு "சத்திய நகரும்" என்றும், இங்குள்ள தீர்த்தம் "சத்திய தீர்த்தம்" என்றும் பெயர் வழங்கலாயிற்று என்றும் தலவரலாறு சொல்லப்படுகிறது.
வைகாசி மாதம் இந்தக் கோயில் தேர்த் திருவிழாவை ஊரே கொண்டாடும். 10 நாட்கள் நடக்கும் இந்தத் திருவிழாவில், கலை நிகழ்ச்சிகள், கூத்து, நாடகம் எனக் களைகட்டும். ஆடிப்பெருக்கு அன்று இந்த ஊரில் ஒரு வினோதமான திருவிழா நடைபெறும். ஊர் மக்கள் அனைவரும் ஆற்றுக்கு வந்து வழிபடுவார்கள். வீட்டில் இருந்து ஏதாவது ஓர் உணவுப் பண்டத்தைத் தயாரித்துக்கொண்டு செல்வார்கள். பெரும்பாலான மக்கள் அதிகமாக தோசைதான் எடுத்துவருவார்கள்.
இந்த திருக்கோவிலின் தென்மேற்கு மூலையில் 20 அடி விட்டமும் 22 அடி உயரமும் உள்ள ஓர் கட்டிடம் பழுதடைந்து காணப்படுகிறது. இது அரசர்கள் ஆண்ட காலதில் தானியங்களைச் சேமித்து வைக்கக் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. இக்கோவில் வழிபாட்டுத்தலமாக மட்டுமல்லாமல் கோட்டையாகவும் பயன் படுத்தப்பட்டிருக்கலாம் என்பதற்கு அத்தாட்சியாக மதில் சுவரில் வீரர்கள் நின்று போரிட வாய்ப்பாகக் கற்கள் பதிக்கப்பட்டிருக்கின்றன. மேலும் இதற்கு அத்தாட்சியாக, சிவன் கோவிலில் இருந்து மேற்கே வீரமார்த்தாண்ட விநாயகர் கோயிலுக்கும், கிழக்கே நினைத்ததை முடித்த விநாயகர் கோயிலுக்கும் இடையே சுரங்கப்பாதைகள் இருந்தன் என்பதற்கு அத்தாட்சியாக சில அடையாளங்கள் இக்கோயில்களில் காணப்படுகின்றன.
இங்கிருந்து பத்மநாபபுரம் அரண்மனைக்கும், சேரன்மகாதேவி சிவன்கோவிலுக்கும் இடையே சுரங்கப்பாதைகள் இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் அதற்கான அடையாளங்கள் காணப்படவில்லை.

No comments:
Post a Comment