Saturday, January 19, 2013

கோணமலை அச்சம்பட்டி


கோணமலை அச்சம்பட்டி:


திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் தாலுகாவில் அமைந்துள்ள ஒரு சிறிய கிராமம் கோணமலை அச்சம்பட்டி, சுமார் 1.5 சதுரக் கிலோமீற்றர் பரப்புடையது வடக்கே புளியங்குடி, கிழக்கே சங்கரன்கோவில், தெற்கே சுரண்டை, மேற்கே கடையநல்லூர், ஆகிய கிராமங்களும் எல்லைகளாகவுள்ளன.

இக் கிராமம் 430 குடும்பங்களை கொண்டிருக்கிறது. கல்வியில் மேலோர், கலைவல்லாளர், கைத்தொழில் வித்தகர் பலரும் வாழ்ந்து வந்தனர். தம் கடின ௨ழைப்பினால் உயர்ந்து சுயமாகவே ஒரு எழில் மிகு நகரமாக வளர்ந்து வருகிறது.

முன்காலத்திலிருந்தே வீரத்துக்கு பெயர் பெற்ற ஊராக இருந்ததால் "அச்சம்பட்டி" என அழைக்கப்பட்டது. எங்களது ஊரின் மேற்கு திசையில் "கோணமலை" அமைந்துள்ளது, எனவே இந்த ஊர் "கோணமலை அச்சம்பட்டி" என அழைக்கப்படுகிறது.

செம்மண்னின் செழுமையும் கிணற்று நீரும் இங்கு விவசாயக்குடியிருப்புகள் தோன்றக்காரணமாயின. இருபதாம் நூற்றாண்டு ஆரம்பம் வரையும் ஏன் அதற்கு பின்பும் விவசாயமே முக்கியதொழிலாக விளங்கிவந்தது. இந்த ஊரின் முக்கிய விவசாய தொழிலாக மலர்கள் சாகுபடி விளங்கிவருகிறது. இதில் குறிப்பாக மல்லி, பிச்சி, கனகாம்பரம், கேந்தி, ரோஜா மற்றும் பல வகையான மலர்கள் விளைவிக்கப்படுகிறது. இம்மலர்கள் தமிழ்நாடு மட்டுமின்றி அண்டை மாநிலங்களான கேரளா, ஆந்திரா, கர்நாடகா மற்றும் மும்பை ஆகிய பகுதிகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. மலர்களின் சந்தையை நிர்ணயிக்கும் முக்கிய நகராக இந்த ஊர் விளங்கிவருவதால் "மலர்களின் நகரம்" என்றும் அழைப்பார்கள்.

No comments:

Post a Comment