Monday, December 10, 2012

மணப்பாடு:


மணப்பாடு:

மணப்பாடு திருச்செந்தூரிலிருந்து 18 கி.மி. தொலைவிலும் திருநெல்வேலியிருந்து 70 கி.மி. தொலைவிலும் அமைந்துள்ள ஒரு கடற்கரைக் கிராமமாகும். இது மணவை என்றும் சுருக்கமாக அழைக்கப்படுகிறது. கடற்கரை பக்கத்திலேயே கடல் மணலால் அமைந்த சிறு மலை
 போன்ற மேடு. உச்சத்தில், ஒரு தேவாலயம். பின்னால், கலங்கரை விளக்கம். இடத்தின் அமைப்பைப்போல, இடத்தின் வரலாறும் ஆச்சரியப்படுத்தும்.

1540இல் இந்த பக்க கடலில் சென்ற ஒரு போர்ச்சுக்கீசிய கப்பலொன்று புயலில் சிக்கியது. கப்பலின் கேப்டன் தங்களை காப்பாற்றினால், கப்பலின் பாய்மரத்தால் சிலுவை செய்து வைப்பதாக வேண்டி கொள்ள, கப்பல் இந்த ஊர் பக்கம் கரை ஒதுங்கியது. அவரும் சிலுவையை செய்து வைத்தார். பிறகு, இப்பகுதியில் கிருஸ்துவம் பரவ ஆரம்பித்தது. தற்போது மணல்மேடு முழுவதும் நிறைய சிலுவைகள் உள்ளது. ஒரு விதத்தில் ஜெருசேலம் போல் இருப்பதால், இவ்வூரை எட்டாம் போப் லியோ ‘சின்ன ஜெருசேலம்’ என்றழைக்க, மணப்பாடு இப்படி ஒரு செல்லபெயருடனும் அழைக்கப்படுகிறது.

இங்கும் ஒரு குகையும், நாழிக்கிணறும் திருச்செந்தூரில் உள்ளது போல் இருக்கிறது. வடக்கில் சிற்றாறு ஒன்று கடலில் சேரும் கழிமுகத்தில் ஊர் தொடங்குகிறது. நீண்ட மணல் செறிந்த அகலமான கடற்கரை அதன் கிழக்கு எல்கை. இதன் ஒரு பகுதி படகுகள் நிறுத்தப்படுமிடமாகவும், மீன்கள் வந்திறங்கும் துரையாக செயல்படுகிறது.


கிழக்கில் வங்காள விரிகுடாவுக்குள் நீளும் ஒரு சிறிய தீபகற்ப பகுதி பாறையும் மணலுமான ஒரு சிறு குன்றாகும். இந்தக் குன்றின் வடபகுதி மணல் செறிந்த கடற்கரையாகவும், தென்பகுதி பாறைகள் மிகுந்த கடற்கரையாகவும் உள்ளது. தீபகற்ப முனையில் ஒரு கலங்கரை விளக்கம் உள்ளது. பெரிய மணல் தேரிகள் ஊரின் தென்மேற்குப் பகுதியெங்கும் காணப்படுகின்றன. இத் தேரிகளில் பனை மரங்கள் செழித்து வளர்ந்துள்ளன. பனைமரங்களும், வேப்ப மரங்களும், சீமை ஒடை மரங்களுமே இந்நிலப் பகுதியில் பரவலாகக் காணப்படும் தாவரங்களாகும்.


மீன் பிடிப்பையும், பனை மரத்தின் பொருட்களையும் வெகுவாக சார்ந்திருக்கும் இச் சிறிய ஊர், முன்னொரு காலத்தில், இலங்கையிலும், பர்மாவிலும் தொழில் புரிந்த இவ்வூரைச் சேர்ந்த வணிகர்களினால் பெரும் செல்வம் ஈட்டியிருந்தது. மேலும், இங்கு இருபதாம் நூற்றாண்டின் நடுவில் நிறுவப்பட்ட கல்விக் கூடங்கள் உள்ளூரில் பலரும், வெளியூர்களிலிருந்து மேலும் பலரும் கல்வி பெறக் காரணமாக விளங்கின. கவிதையும், இசையும், நடிப்பும், ஓவியமும், சிற்பக் கலைகளும் இவ்வூரில் வளர்ந்தன.

No comments:

Post a Comment