Monday, December 10, 2012

திருநெல்வேலி மாணவி ஜி. சூரியா தேவி


திருநெல்வேலி மாணவி ஜி. சூரியா தேவி மாநில அளவில் முதலிடம் பெற்று தங்கப் பதக்கம் பெற்றார்.


சென்னையில் நடைபெற்ற மாநில யோகா போட்டியில் பாளையங்கோட்டை புஷ்பலதா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவிக்கு தங்கப் பதக்கம் கிடைத்துள்ளது. சென்னை நேரு உள் வ
ிளையாட்டரங்கில் நடைபெற்ற இந்த போட்டியில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து அணி மேலாளர்கள் எஸ்.பி. ஜெகமோகன், கே.எஸ். ஆனந்தி தலைமையில் 5 மாணவிகளும், 3 மாணவர்களும் பங்கேற்றனர். இதில் 8-9 வயதுக்குள்பட்ட பிரிவில் பாளை. புஷ்பலதா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 5-ம் வகுப்பு மாணவி ஜி. சூரியா தேவி மாநில அளவில் முதலிடம் பெற்று தங்கப் பதக்கம் பெற்றார். அவருக்கு தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் எம். கிரேஸ் ஹேனா பதக்கம், பாராட்டு சான்றிதழை வழங்கினார்.

இம் மாணவியை பள்ளி தாளாளர் புஷ்பலதா பூரணன், பள்ளி முதல்வர் இந்திராகாந்தி மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.

No comments:

Post a Comment