Monday, December 10, 2012

எட்டு ஏக்கர் நிலபரப்பில் பூங்கா:


எட்டு ஏக்கர் நிலபரப்பில் பூங்கா:
---------------------------------------------------

இலங்கையின் முதலாவது உயிரியல் பல்வகைமை பூங்கா எதிர்வரும் சில மாதங்களில் மக்கள் பார்வைக்கு திறந்துவைக்கப்படவுள்ளதாக சுற்றுலா
துறை அமைப்பு
குறிபிட்டுள்ளது


பாராளுமன்ற கட்டடத்தொகுதிக்கு அருகில்
எட்டு ஏக்கர் நிலப்பரப்பில் இந்தப் பூங்கா நிர்மாணிக்கப்படுகின்றது.

இந்தப் பூங்காவில் இலங்கைக்கே உரித்தான அரிய வகையான தாவரங்கள் பயிரிடப்படவுள்ளதாக அமைப்பின்
செயலாளர் தெரிவித்துள்ளார்.

உயிரியல் பல்வகைமையின் முக்கியத்துவத்தை மக்களுக்கு தெரியப்படுத்துவதற்கும், சிங்கராஜ வனம் போன்ற இயற்கை எழில்மிகு இடங்களை கொழும்பில் உருவாக்குவதும் இதன்நோக்கமாகும்.

இந்தப் பூங்காவிற்குள் வண்ணத்துப்பூச்சிகளுக்கான வலயமொன்றையும் அமைப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக சுற்றுலா
துறை அமைப்பு தெரிவித்துள்ளது

No comments:

Post a Comment