தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களுள் ஒன்றான திருநெல்வேலி மாவட்டத்தில் களக்காடுக்கு 15 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் திருக்குறுங்குடி மலைப்பகுதி தொடங்கி அம்பாசமுத்திரத்திலிருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் முண்டந்துறை மலைப்பகுதி வரையிலா
ன வனப்பகுதி களக்காடு-முண்டந்துறை புலிகள் சரணாலயம் (Kalakad Mundanthurai Tiger Reserve) ஆகும். இதன் மொத்த பரப்பளவு 895 சதுர கிலோமீட்டர் ஆகும். இது தமிழகத்தில் அமைந்துள்ள புலிகளுக்கான சரணாலயம் என்றாலும், இங்கு மிளா, காட்டுப்பன்றி, சிங்கவால் குரங்கு, யானை, உடும்பு, கரடி, பலவகையான பாம்புகளும் அதிகம் வாழ்கின்றன. இந்தியாவில் மொத்தம் 43 புலிகள் சரணாலயங்கள் உள்ளன. 2010 - ஆம் நடத்தப்பட்ட ஆய்வில் இச்சரணாலயத்தில் 13 புலிகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment