Monday, December 10, 2012

கூடங்குளம் அணுமின் நிலையம்


கூடங்குளம் அணுமின் நிலையம் எதிர்த்த வழக்கில் வரும் 29ம் தேதி தீர்ப்பு கூறப்படும் என்று உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது. கூடங்குளம் அணுமின்நிலைய வழக்கு நேற்று உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் ஜோதிமணி, தேவராஜ் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்
திய அரசு சார்பாக கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் மோகன்பராசரன் ஆஜராகி, அணுமின்நிலையத்தில் இருந்து வெளியாகும் கழிவு நீர் எவ்வளவு வெப்பத்தில் வெளியாக வேண்டும் என்று தமிழ் நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் நிர்ணயம் செய்து அதற்கு அனுமதி கொடுத்துள்ளது.இதில் மத்திய அரசு அனைத்து தற்காப்பு நடவடிக்கைகளையும் எடுத்து செயல்பட்டுள்ளது என்றார்.

மனுதாரர் சுந்தரராஜன் சார்பாக வக்கீல் ராதாகிருஷ்ணன் ஆஜராகி, ''அணுஉலையில் இருந்து 45 டிகிரி சென்டிகிரேட் வெப்ப நிலை யில் கழிவுநீர் வெளியாகிறது. இது கடல் வாழ் உயிரினங் களை பாதிக்கும்'' என்றார். தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பாக ரீட்டாசந்திரசேகர் ஆஜராகி, ''அணுஉலையில் இருந்து 45 டிகிரி சென்டிகிரேட் வெப்பத்தில் இருந்து கழிவுநீர் வெளியானதும், அது பைப் மூலம் வரும் போது 38 டிகிரி சென்டிகிரேட்டுக்கு குறைந்து விடுகிறது. கடல் வெப்பத்தில் இருந்து 7 டிகிரி வெப்பம் குறைந்த அளவு கழிவு நீர் வெளியாகி கடலில் கலப்பதால் கடலில் உள்ள உயிரினங்கள் பாதிக்கப்படாது'' என்றார். இரு தரப்பு வாதங் களையும் கேட்ட நீதிபதிகள் வரும் 29ம் தேதி தீர்ப்பளிப்பதாக அறிவித்தனர்.

No comments:

Post a Comment