Wednesday, January 16, 2013

T V சுந்தரம் அய்யங்கார்


T V சுந்தரம் அய்யங்கார்:

திருக்குறுங்குடி வே சுந்தரம் ஐயங்கார் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள திருக்கருங்குடி என்ற ஊரில் பிறந்தார். இவரை பலரும் T V சுந்தரம் அய்யங்கார் என்று அழைப்பர். இவர் முதலில் வழக்குரைநராக பணியாற்றினர். பின்னர் தந்தையர் விருப்பத்திற்கிணங்க இரயில்வேயிலும் பின் வங்கியிலும் பணி புரிந்தார். இவர் சிறிது காலத்திற்கு பின் தொழில் துறையில் ஈடுபட்டார்.

1912இல் மதுரையில் முதலில் பேருந்து சேவையை ஆரம்பித்து தென் இந்தியாவில் சாலை போக்குவரத்து துறைக்கு அடித்தளமிட்ட பெருமை இவரையே சேரும். இவர் தொழிலதிபர் மற்றும் இந்தியாவின் பெரிய பல்துறை தொழிலகங்களில் ஒன்றான டி.வி. சுந்தரம் அய்யங்கார் அண்ட் சன்சு குழும நிறுவனங்களின் நிறுவனர் ஆவார். இரண்டாம் உலகப்போர் சமயத்தில் சென்னை மாகாணத்தில் பெட்ரோல்தட்டுப்பாடு ஏற்பட்டது. அதனால் இத்தேவையை ஈடுகட்டும் விதமாக டிவிஎசு கேசு பிளாண்ட்டை வடிவமைத்து உருவாக்கினார். இரப்பர் புதுப்பிப்பு ஆலை, தி மெட்ராசு ஆட்டோ சர்விசு லிமிட்டட், சுந்தரம் மோட்டார் லிமிட்டட் போன்ற நிறுவனங்களை துவங்கினார்.

இந்திய அரசு இவரை பெருமைபடுத்தும் விதத்தில் வெண்கலமும் பளிங்கும் கொண்ட இவரின் மார்பளவு உருவச்சிலையை மதுரையில் ஆகஸ்டு 7, 1957 இல் நிறுவியது.

No comments:

Post a Comment