Wednesday, January 16, 2013

நெல்லையில் தொடரும் மின்வெட்டு :


நெல்லையில் தொடரும் மின்வெட்டு :

தற்போது மின்வெட்டு தமிழக மக்களுக்கு மிகுந்த துன்பமாக மாறி விட்டது. தமிழகத்தில் சென்னையை தவிர 31 மாவட்டங்களில் மின்வெட்டு இயல்பு வாழ்கையில் ஒன்றாகவே மாறிவிட்டது. தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் 12 மணி நேரம் அறிவிக்கப்படாத மின்வெட்டு அதிரடியாக அமல் படுத்தப்பட்டது. நேற்று அதிகாலை 6 மணி நிலவரப்படி நெல்லை மண்டலத்தில் 300 மெகாவாட் மற்றும் ஈரோடு மண்டலத்தில் 200 மெகாவாட் மின்சாரம் உற்பத்தியானது. இதனால் 2 மணி நேரம் மின் விநியோகமும் அடுத்த 2 மணி நேரம் மின் தடையும் என மாறி மாறி அளித்து சமாளிக்க முடிவு செய்துள்ளனர்.

இதனால் செய்வதறியாது திகைத்த மின் வாரியத்தினர் அறிவிக்கப்படாத மின்தடையை முழுமையாக அமல்படுத்தினர். காலை முதல் இரவு வரை மின்சார சப்ளை இல்லாததால் தொழில் கூடங்களில் மட்டும் அல்லாமல் வீடுகளிலும் எந்த வித பணிகளையும் செய்ய முடியாமல் இயல்பு வாழ்க்கை முடங்கியது.

மதுரை, தேனி மாவட்டங்களில் 3 நாளாக 12 மணி நேரத்திற்கும் மேலாக மின்வெட்டு நிலவுகிறது. இதனால் தொழிற்சாலைகளுக்கு விடுப்பு அறிவிக்கப்பட்டன.விருதுநகர் மாவட்டத்தில் 13 மணி நேரமும், திண்டுக்கல், ராமநாதபுரம் மாவட்டங்களில் 14 மணி நேரமும், வேலூர் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக மின்வெட்டு நேரம் 10 மணி நேரமாகவும் , மற்ற மாவட்டங்களிலும் மின்சப்ளை துண்டிக்கப்படுகிறது.

இரவு முழுவதும் 1 மணி நேரம் மின் தடையும், 1 மணி நேரம் மின் சப்ளையும் நடைபெற்றது. இதனால் குழந்தைகள், முதியவர்கள் மட்டுமல்லாது அனைத்து தரப்பினரையும் தூங்கவிடாமல் செய்த மின் தடை பகலிலும் கொளுத்தும் வெயிலில் புழுக்கத்தில் தவிக்க வைக்கிறது.

No comments:

Post a Comment