கல்லிடைக்குறிச்சி அய்யா நீலகண்ட சாத்திரி:
அய்யா நீலகண்ட சாஸ்திரி திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கல்லிடைக்குறிச்சி என்ற ஊரில் ஓர் ஏழை பிராமணக் குடும்பத்தில் பிறந்தவர்.திருநெல்வேலி இந்துக்கல்லூரியில் படித்து இளங்கலைப்பட்டம் பெற்றார். அப்பொழுது குடும்ப வசதியின்மை காரணமாக இவரது தந்தையார் படிப்பை விட்டுவிடும்படி கூறினார். ஆனால் இவரது மூத்த சகோதரர் படிப்பின் உயர்வினை மனத்திற் கொண்டு படிப்பபைத் தொடரச் சொல்லி இவருக்கு உதவி செய்தார். பின்னர் முதுகலைப் பட்டம் பெறச் சென்னைக்குச் சென்றார். இடைநிலை வகுப்பை (FA) முடித்து விட்டு மேற்படிப்பைச் சென்னை கிருத்துவக் கல்லூரியில் தொடர்ந்தார். அப்பொழுது இவர் சமஸ்கிருதத்திலும் ஆங்கிலத்திலும் முதன்மையான மதிப்பெண்கள் பெற்றார். இதனால் உதவிச்சம்பளம்பெற்று தொடர்ந்து படிப்பைத் தொடர சாதகமான நிலைமை ஏற்பட்டது. முதுகலைப் பட்டத்தில் (எம்.ஏ) சென்னை மாநிலத்திலேயே முதல் மாணவனாகத் தேர்ச்சி பெற்றார்.
1913 முதல் 1918 வரை இந்துக் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணிபுரிந்தார். 1918-20 காலகட்டத்தில் வாரணாசி இந்து பல்கலைக்கழகத்தில் வரலாற்றுப் பேராசிரியராக வேலை பார்த்தார். அதன் பின்பு புதிதாகத் தொடங்கப்பட்ட அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் கலைக்கல்லூரியின் முதல்வராக பொறுப்பேற்றார். பிறகு 1929ல் திருச்சி நேஷனல் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்தார். அதே ஆண்டு சென்னை பல்கலைக்கழகத்தில் வரலாறு மற்றும் தொல்லியல் பேராசியராக சாக்கோட்டை கிருஷ்ணசாமி அய்யங்காருக்குப்பின் பதவியேற்று 1946 வரை பணிபுரிந்தார்.
1952 முதல் 1955 வரை மைசூர் பல்கலைக்கழகத்தில் இந்தியவியல் பேராசிரியராக இருந்தார். 1954ல் மைசூர் மாநிலத்தின் தொல்லியல் துறையின் கெளரவ இயக்குனராக நியமிக்கப்பட்டார்.1950களின் ஆரம்பத்தில் அகில இந்திய கீழைத்தேய மாநாட்டின் தலைவராக இருந்தார். 1957 -1972 வரை இவர் யுனெஸ்கோவின் தென்னிந்தியப் பாரம்பரிய கலாச்சார நிறுவனத்தின் இயக்குனராகப் பணிபுரிந்தார். 1959 ல் கோடைப்பருவத்தில் சிக்காகோ பல்கலைக்கழகத்திற்குச் சென்று தென்னிந்திய வரலாறு பற்றி பல சொற்பொழிவுகள் ஆற்றினார்.
வரலாற்றுத் துறையில் நுட்பமான அறிவியல் கண்ணோட்டம் மிக்க பேராசிரியராக இவர் விளங்கி வந்தார். இவரது புலமையும் ஆய்வுநுட்பமும் பலரால் மதிக்கப்பெற்று வந்தன. இவர் எழுதிய ஆராய்ச்சிக் கட்டுரைகள் வரலாற்றுத்துறையில் முக்கியத்துவம் மிக்கவையாகத் திகழ்ந்தன.
சாஸ்திரி எழுதிய கட்டுரைகளும் நூல்களும் வரலாற்றுத்துறையில் ஒரு புதிய வெளிச்சம் பாய்ச்சின. சென்னைப் பல்கலைக்கழக இதழ், இந்திய வரலாற்று மலர், இந்தியன் ஆன்டிகுயரி, இந்தியன் ஹிஸ்டாரிகல் குவார்டர்லி, எபிகிராபிஃகா இந்திகா, கல்கத்தா ரிவ்யூ ராயல் ஏஷியாடிக் சொசைட்டி மலர், கல்ச்சுரல் ஹெரிடேஜ் ஆப் இந்தியா போன்ற பல வரலாற்று இதழ்களில் இவரது கட்டுரைகள் இடம்பெற்றன.
இவர் இருபதாம் நூற்றாண்டின் வரலாற்றுத்துறையில் புதிய தடங்கள் புதிய களங்கள் உருவாவதற்குக் காரணமாக இருந்தவர். வரலாறு ஒரு அறிவியல் கற்கை நெறியாகவும் ஆய்வுத்துறையாகவும் பல்பரிமாணம் பெற்று, தமிழ்ச்சிந்தனையில், அதன் அனுகுமுறையில் மாற்றங்கள் உருவாகவும் காரணமாக இருந்துள்ளார் எனலாம்.
தென்னிந்திய மற்றும் தமிழர் வரலாறு வரைவியலில் பேராசிரியர் நீலகண்ட சாஸ்திரி ஒரு மடைமாற்றத் தளம் - முன்னோடி என்றுதான் கூறவேண்டும். இன்று ஆய்வுலகம் பல்வேறு புதிய தளமாற்றங்கள் நோக்கி பயனிக்கின்றது. ஆனால் சாஸ்திரி அமைத்துக் கொடுத்த ஆய்வுத்தளம் அடிப்படையானதும் முக்கியமானதுமாகும். இந்திய அரசு இவரது அளப்பெரிய சேவையைப் பாராட்டி 1958ஆம் ஆண்டு 'பத்மபூஷன்' (இந்தியப் பொதுமக்களுக்கு அளிக்கப்படும் மூன்றாவது உயரிய விருது) என்னும் உயர் பட்டத்தை வழங்கிச் சிறப்பித்தது. அத்தகைய பெருந்தகை ஜூன் மாதம் 15ஆம் தேதி 1975ஆம் ஆண்டு இந்த உலகை விட்டுப் பிரிந்தார். ஆனால் ஆராய்ச்சி உலகில் நிலைத்து நின்கின்றார்.

No comments:
Post a Comment