அருள்மிகு தொண்டர்கள் நயினார் சுவாமி திருக்கோயில்:
To view the English Translation , see below the Tamil version
அருள்மிகு தொண்டர்கள் நயினார் சுவாமி திருக்கோயில், திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் அருகில் உள்ளது.
சிவத்தல யாத்திரை சென்ற திருஞானசம்பந்தர் குற்றாலம் சென்றுவிட்டு, திருநெல்வேலிக்கு வந்தார். நெல்லையப்பரை வணங்கி பதிகம் பாடினார். அப்போது அவருடன் வந்த அடியார்கள், இவ்விடத்தில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபடவேண்டுமென விரும்பினர். தம் விருப்பத்தை சம்பந்தரிடம் தெரிவித்தனர்.
சம்பந்தருக்கு அவர்களது விருப்பத்தை நிறைவேற்ற வேண்டுமென ஆசை இருந்தது. ஆனாலும், லிங்கத்தை தனியே பிரதிஷ்டை செய்ய அவர் மனம் இடம் தரவில்லை. எனவே அகத்தியரை மானசீகமாக எண்ணி அடியார்களின் விருப்பத்தை நிறைவேற்றும்படி வேண்டினார். அவர் வில்வவனமாக இருந்த இப்பகுதியில் ஓரிடத்தில் சிவன் சுயம்புலிங்கமாக இருப்பதாக காட்டினார். சம்பந்தரும் இங்கு வந்தார். சுயம்புலிங்கம் இருந்ததைக் கண்டார்.
பின் சம்பந்தர், அடியார்களுடன் சேர்ந்து லிங்கத்திற்கு பூஜை செய்து வழிபட்டார். சிவன் அவர்களுக்கு காட்சி கொடுத்தருளினார். தொண்டர்களுக்காக எழுந்தருளியவர் என்பதால் சிவன், "தொண்டர்கள்நயினார்" என்ற பெயரும் பெற்றார்.
மேலும் சிவபக்தரான கருவூர்சித்தர் நெல்லையப்பரை தரிசிக்க வந்தார். அவர் நெல்லையப்பரிடம் தனக்கு காட்சி தரும்படி அழைத்தார். ஆனால், சிவனோ அவருக்கு காட்சி தரவில்லை. எனவே கருவூரார், "ஈசன் இங்கில்லை, எருக்கு உண்டாகுக!" என்று கோபத்துடன் சாபமிட்டுவிட்டு திரும்பிச் சென்றார். சிறிது தூரம் சென்றபிறகு சிவன் அவருக்கு ஜோதி வடிவில் காட்சி தந்தார். அவர் சிவனை வணங்கியபோது, ஜோதியானது நெல்லை தலத்தை நோக்கி வந்தது. கருவூராரும் பின்தொடர்ந்தார். ஜோதி இத்தலத்தில் உள்ள சிவலிங்கத்திற்குள் ஐக்கியமானது. பின் கருவூராருக்கு சிவன் காட்சி தந்து, "பொறுமை அனைவருக்கும் அவசியம். பொறுமை இல்லாதவர்களால் எதையும் அடைய முடியாது," என்று உபதேசித்து விட்டு மறைந்தார். கருவூராரும் உண்மையை உணர்ந்தார். பின், "ஈசன் இங்கிருக்கிறார், எருக்கு அற்றுக!" என்று சொல்லிவிட்டு தன் தலயாத்திரையை தொடர்ந்தார்.
இங்கு அம்பாள் கோமதி தனிச்சன்னதியில் சுவாமிக்கு இடதுபுறத்தில் கிழக்கு நோக்கியிருக்கிறாள். இவளுக்கு முன்புறம் மகாமண்டபத்தில் ஸ்ரீசக்ரம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் இவளது சன்னதியில் அபிராமி அந்தாதி பாடி வழிபடுவது சிறப்பு. ஆடித்தபசு விழாவின்போது, அம்பாளுக்கு மாவிளக்கு வைத்து சிறப்பு வழிபாடுகள் நடக்கிறது. திருமணத்தடை உள்ள பெண்கள் இவளுக்கு தாலிப்பொட்டு, புடவை சாத்தி வேண்டிக்கொள்கிறார்கள்.
அம்பாள் சன்னதி பிரகாரத்தில் அரசமரத்தின் கீழே வினை தீர்க்கும் விநாயகர், ஆவுடையார் மீது இருக்கிறார். இவருக்கு பின்புறத்தில் மற்றோர் விநாயகர் மேற்கு நோக்கி அருளுகிறார். ஒரே இடத்தில் முன்னும், பின்னும் திரும்பிய விநாயகர்களை காண்பது விசேஷமான தரிசனம்.
----
Sri Thondargal Nainar Swami Temple:
Sri Thondargal Nainar Swami Temple, Near Sri Nellayappar temple in Tirunelveli. Lord Shiva in the temple is a swayambumurthy. Main Vianayaka of the temple is Vanni Vinayaka. The vimana-tower above the sanctum sanctorum is of hexaganol type.
During pilgrimage, saint Tirugnanasambandar came to Nellayappar temple from Kuttralam, worshipped the Lord and sung hymns. His followers desired to install a Shivalinga and expressed their wish to the saint. Though Sambandar agreed to their wish, he did not want to do it individually himself. He prayed to Sage Agasthya and sought his blessings to fulfil the desire of his followers. Sage Agasthya pointed out a place thick with Vilwa trees and indicated the presence of a Swayambu Shivalinga. Sambandar got the Shivalinga and performed pujas and worshipped with his followers-Thondargal. As Lord Shiva appeared here for Thondars, He is named Thondargal Nainar.
A staunch Shiva devotee who's name Karuvur Chithar, begged Lord Nellaiappar seeking His darshan but Lord did not turn up. Chithar angrily said that Lord Shiva was not there and cursed the land be infested with bushes and returned back. After passing a short distance, Chithar had the darshan of Lord in the form of Jyoti-light. When he prostrated at His feet, Jyoti began to move towards the Nellai temple and merged with the Linga. Granting darshan, Lord advised Chithar to practice patience and said impatience could not bring anything good. Chithar said, “Lord is here, let the bushes disappear and moved asway, this is the Greatness Of this Temple. This event is celebrated in the temple on Aavani Moola Star day in August-September.
one more speciality of this temple is that Lord Vinayaka graces on an Avudayar (the seat or peeta on which Shivalingas are installed) in the prakara under a peepal tree-Arasa maram. Behind Him is another Vinayaka facing north. This is a strange form of Vinayaka facing opposite sides. Saint Tirugnanasambandar and Sage Agasthya are in the mandap in front of Lord Shiva shrine. Sani Bhagwan in the prakara graces with a parrot in his hand. There is also a Vanni tree and a well in the temple complex. It is worth recalling the story of a well, vanni tree and a Shivalinga deposing in a case of wedding of a girl in Madurai in her favour at Sri Meenakshi Sundareswarar temple, when mischievous relatives tried to defame her. Lord Vanni Vinayaka reminds us this story. There is a Shivalinga right of Vinayaka with two nagas (serpent deity) near by each facing the opposite side. Those facing adverse aspects of serpent planets pray here for relief. Lord Dakshinamurthy in the ghoshta wall has His left hand on a serpent. There are shrines for Lord Nardana Vinayaka and Lord Muruga in the prakara.
Here People pray for the welfare of children, relief from the adverse effects of serpent planets and wedding boons.

No comments:
Post a Comment