Saturday, January 19, 2013

தென்காசி


தென்காசி :-

தென்காசி திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு பசுமையான நகராட்சிஆகும். ஏறத்தாழ 1030 ச.கி.மீ பரப்பளவு கொண்டது. இந்நகரம் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் இயற்கை அழகுடன் காட்சி அளிக்கிறது. இங்குதான் குற்றாலம் அமைந்துள்ளது. இங்கு பெய்யும் பருவ மலை சாரலுக்கு பெயர் போனது. பொருநையும், சிற்றுறும் பாசன வசதிக்கு உதவுகின்றன.

இங்குதான் புகழ் பெற்ற காசி விஸ்வநாதர் கோவில் அமைந்துள்ளது. பாண்டிய மன்னனின் கனவில் சிவபெருமான் தோன்றி தெற்கே கோவில் கட்டுமாறு
ஆணையிட்டுள்ளார். அதற்கிணங்க கி.பி. 1445 இல் பாண்டியர்களால் கோவில் கட்டபட்டது. இக் கோவில் பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் கட்டப்பட்டுள்ளது.பத்துக் கைககள் கொண்ட நடராசர் சிலையும், 16 கைகள் கொண்ட திருஉருவமும் இக்கோயிலில் உண்டு.


தென்காசியில் வேளாண்மையும், நெசவுத் தொழிலும் நன்கு வளர்ந்து வருகின்றன.சாயத்தொழிலும், நல்லெண்ணை வணிகமும், மரம் அறுக்கும் தொழிலும் நடை பெறுகின்றன.

No comments:

Post a Comment