திருவிலஞ்சி குமார கோவில்
இலஞ்சி திருநெல்வேலி மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இலஞ்சி, தென்காசியிலிருந்து செங்கோட்டை செல்லும் பாதையில் உள்ள திருக்குற்றாலம் அருகிலுள்ள இச்சிற்றூர் மிகவும் பசுமையாகவும் ஊர்.
திருவிலஞ்சி குமார கோவில்:
நதி : சித்ராநதி
தலவிருக்ஷம் : மகிழமரம்
இலஞ்சியில் இரண்டாயிரம் வருடங்களுக்கு மேல் பழமையான கோவில் திருவிலஞ்சி குமார கோவில் ஆகும். இங்கு அருள்பாலிக்கும் குமரன் இளமை பொருந்தியவராகக் காட்சியாளிகிறார். தமிழ்க் கடவுள் இவ்விதம் இங்கே தோன்றியமைக்கும் காரணம்
திரிகூடமலையின் வடகீழ்த்திசையில் காசியபர், கபிலர், துர்வாசர் மூன்று முனிவர்களும் கூடிப் பேசிக் கொண்டிருந்தனர். பலவேறு தத்துவங்களையும், அதன் நுணுக்கங்களையும் ஆய்ந்து பேசிக் கொண்டிருந்த அவர்களுக்குள் ஒரு சந்தேகம். இவ்வுலகம் இல் பொருளா? உள் பொருளா என்பதே! கபிலர் இல் பொருள் எனத் தன் வாதத்தை நிலைநாட்ட, காசியபரும், துர்வாசரும் முத்தொழில்களையும் செய்யும் ஈசன் இல்லாது இல் பொருள் தோன்றுவது எங்கனம் எனக் கேள்வி எழுப்பினர். உலகம் உள் பொருளே எனச் சொல்ல, கபிலரும் நன்கு யோசித்து அவர்கள் கருத்தில் உண்மை இருப்பதை உணர்ந்து ஏற்றுக் கொள்கிறார். ஆனாலும் மூவருக்கும் மீண்டும் வாதம் ஆரமபித்தது. உள் பொருளான உலகின் உண்மைப் பொருள் யார் என்று வாதம் புரிந்து கபிலர் திருமாலே எனச் சொல்ல பிரம்மபுத்திரனான காசியபரோ, பிரம்மனே எனச் சொல்ல , ருத்ராம்சமான துர்வாசரோ ருத்ரரே எனச் சொல்ல குழப்பம் ஏற்பட்டது.
குழப்பத்தைத் தீர்க்கவேண்டும், அதற்கென நடுநிலை வகிக்கும் ஆள் வேண்டுமே யாரைக் கூப்பிடுவது என யோசித்து, யாரேனும் ஒரு இளைஞனே தகுதியானவன் என்று எண்ணுகின்றனர். அப்போது குமரக் கடவுள் ஓர் கட்டிளம் காளையாக அவர்கள் முன் தோன்றினான். (சிலர் கபிலரும், துர்வாசரும் முருகனை வேண்டியதாகவும் கூறுவார்கள்). அவன் தன் உண்மை உருவை அவர்கள் மூவருக்கும் காட்டி ஆதிப்பரம்பொருள் தாமே என்றும், மூவினையும் செய்யும் மும்மூர்த்திகளாகத் தன்னை மூன்று முனிவர்களிடமும் காட்டியும் யாமே படைத்தல், காத்தல், அழித்தல் முத்தொழிலையும் செய்பவர் என உணர்த்தினார். அவரை வணங்கிய முனிவர்கள் வழிபட்ட இடத்திலேயே அதே கட்டிளம் காளைக் கோலத்தில் இன்றளவும் நின்றுகொண்டு வேண்டியவர்க்கு வேண்டியவற்றை அருளுகின்றான் முருகன்.
மேலும் இங்கு அமைந்துள்ள ஒரு சிறப்பு இந்த ஊரின் ஈசன் அகத்தியரால் மணலால் பிடிக்கப் பட்டு வணங்கப் பெற்றவர். காரணம் குற்றால நாதரைத் தரிசிக்க வந்த அகத்தியருக்கு அங்கே தரிசனம் கிடைக்கவில்லை அதனால் பெருமாளே காட்சி கொடுக்கிறார். பின் அகத்தியர் இலஞ்சி வந்து முருகனை வேண்ட, முருகனும் அருள் புரிகிறார். முருகனின் ஆலோசனைப்படி அங்குள்ள சிற்றாற்றின் கரையிலேயே குமரனுக்கு அருகேயே அவர் தந்தைக்கும் வெண்மணலால் லிங்கம் பிடித்து வழிபட்டார் அகத்தியர். அகத்தியர் அவ்வாறு பூஜை செய்த லிங்கமே இன்றும் இருவாலுக நாயகர் என்னும் பெயருடன் வழங்கப் படுகிறார். இங்கே ஈசனின் அருள் கிடைத்ததுமே அகத்தியர் திரும்பக் குற்றாலம் செல்கிறார். மாமனைத் தள்ளிவிட்டு அங்கே தந்தையைக் கொண்டு வந்த சாமர்த்தியசாலி முருகனே இங்கு காணலாம்.

No comments:
Post a Comment