Wednesday, January 16, 2013

மெழுகுச்சிலையாக அவதாரம் எடுக்கும் ஸ்டீவ் ஜொப்ஸ்


மெழுகுச்சிலையாக அவதாரம் எடுக்கும் ஸ்டீவ் ஜொப்ஸ்:

இன்றைய தொழில்நுட்ப உலகில் அதிகளவான மக்களின் வாயில் உச்சரிக்கப்படும் தொழில் நிறுவனத்தின் பெயர் அப்பிள் என்பதே ஆகும். இவ் அப்பிள் நிறுவனத்தின் தோற்றத்திற்கு அடித்தளமிட்டவர் ஸ்டீவ் ஜொப்ஸ் என்பவர் ஆவார். இவர் ஆப்பிள் நிறுவனத்திற்காக உழைத்த உழைப்பு மிகவும் பெரிது . இவ்வாறு ஆப்பிள் நிர்வாகத்தை முழுமையாக செய்த இவர் கடந்த வருடம் அக்டோபர் மாதத்தில் மரணத்தை தழுவினார்.

இவர் இறந்து ஓராண்டு ஆனதை முன்னிட்டும், அவரது சாதனைகளை நினைவுகூரும் விதமாக செப்டெம்பர் 27ஆம் தேதியான இன்று ஹொங்ஹொங் நாட்டில் நடைபெறவிருக்கும் Madame Tussauds பிரம்மாண்டமான கண்காட்சியில் மெழுகில் உருவாக்கப்பட்டுள்ள அவரது சிலை காட்சிப் படுத்தப்படவுள்ளது.

No comments:

Post a Comment