Saturday, January 19, 2013

தீபாவளி டிப்ஸ்


தீபாவளி டிப்ஸ் :

* பெரியவர்களின் மேற்பார்வையில் குழந்தைகளை பட்டாசுகளை வெடிக்க செய்யுங்கள்.

* பட்டாசு வெடிக்கும்போது உடையில் தீப்பற்றிக் கொண்டால், உடனே ஓடுதல் கூடாது. தரையில் படுத்து உருண்டு புரள வேண்டும். அப்போதுதான் தீ அணையும். ஓடுவது தீயை அதிகரிக்கவே செய்யும்.

* மத்தாப்புகள் சுற்றிய பிறகு, அதனை தண்ணீரில் அணைத்து விட்டு தரையில் போடவேண்டும்.

* ராக்கெட் போன்ற வாண வெடிகளை குடிசைகள் இல்லாத திறந்த வெளியில் வெடிக்கச் செய்யுங்கள்.

* வெடிகளை கையில் பிடித்து வெடிக்காமல், தரையில் வைத்து வெடிக்க வேண்டும்.

* வெடிகளை டின், பாட்டில் போன்றவற்றில் வைத்து வெடிக்க அனுமதிக்காதீர்கள்.

* பட்டாசுகள் வெடிக்கும்போது தளர்ந்த ஆடை, நைலான், சிலக் துணிகளைப் பயன்படுத்தக் கூடாது.
பருத்தி ஆடைகள் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

* செருப்புகளை அணிந்து கொண்டே பட்டாசுகளை வெடிக்க வேண்டும்.


அனைவரும் தீபாவளி பாதுகாப்பாக கொண்டாடி மகிழுங்கள்........

No comments:

Post a Comment