Thursday, January 17, 2013

திருநெல்வேலி செய்திகள்:


திருநெல்வேலி செய்திகள்:-


நெல்லையில் பிரசித்தி பெற்ற சேரன்மகாதேவி கொழுந்துமாமலை முருகன் கோயில் கார்த்திகை தீப விழா வரும் 27ம் தேதி நடக்கிறது.

சேரன்மகாதேவி கொழுந்துமாமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் திருக்கார்த்திகை தீபவிழா ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தாண்டு விழா வரும் நவ.27ம்தேதி நடக்கிறது. அன்று காலை 7.30 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடக்கிறது.

மாலை 6 மணிக்கு தீப பூஜை நடக்கிறது.
கோயிலில் இருந்து பகல் 1 மணிக்கு பக்தர்கள் புறப்பட்டு சென்று மலை உச்சியில் மாலை 6 மணிக்கு தீபம் ஏற்றுகின்றனர். இதையடுத்து பக்தர்கள் தங்கள் வீடுகளில் தீபம் ஏற்றுவர். பக்தர்கள் வசதிக்காக சேரன்மகாதேவியில் இருந்து கோயில் வரை அரசு சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.


அன்று காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை கோயில் நடை திறந்து இருக்கும், ஏற்பாடுகளை நெல்லை ஸ்ரீமத் பரசமய கோளரி நாதர் ஆதீனம், சேரன்மகாதேவி விஸ்வ கர்ம விழா கமிட்டியினர் செய்து வருகின்றனர்.

No comments:

Post a Comment