சிவகிரி:
சிவகிரி, குற்றாலம் செல்லும் சாலையில் அமைந்துள்ள் சிரிய ஊராகும். திருநெல்வேலியிலிருந்து மேற்கே 16 கி.மீ தொலைவில் உள்ளது.இங்கு மாம்பழ விளைச்சலும், நெல்விளையும் அமோகமா இருக்கும். இதனை 'குட்டி மலையாளம்' என்று அழைப்பார்கள். சிவகிரிக்கு மேற்கே மேற்கு தொடர்ச்சி மலையில் ஏலக்காய் தோட்டங்கள் உள்ளன. 'முக்கூடற்பள்ளு' என்ற புகழ்பெற்ற பள்ளு இலக்கியம் இவ்வூரைப் பற்றிப் பேசுகிறது.இங்குள்ள பாலசுப்பிரமணியசுவாமி திருக்கோயில் மிகவும் சிறப்பு வாய்ந்த கோவில் ஆகும். இக்கோவில் பற்றி சிரிய தகவல் வாருங்கள் காண்போம்.
முருகப்பெருமான், திருச்செந்தூரில் சூரபத்மனை வதம் செய்துவிட்டு,தெய்வானையை மணந்து கொள்ள திருப்பரங்குன்றம் திரும்பினார். அப்போது முருகனின் தரிசனம் காண விரும்பிய அகத்தியர் இத்தலத்திலுள்ள குன்றில் தவம் செய்து கொண்டிருந்தார். அவரது வேண்டுதல்படி இங்கேயே எழுந்தருளினார். பிற்காலத்தில் இங்கு முருகனுக்கு கோயில் எழுப்பப்பட்டது. சூரபத்மனை போரிட்டு அழித்த முருகன் இங்கு பால வடிவில் காட்சி தருவதால், “பாலசுப்பிரமணியர்” என்று அழைக்கப்படுகிறார். இவரது பாதத்தில் நவக்கிரகங்களின் உருவம் பொறித்த தகடு வைக்கப்பட்டுள்ளது. கிரக தோஷம்தோஷம் உள்ளவர்கள் அந்த கிரகத்தின் ஆதிக்கம் உள்ள நாளில் முருகனை வழிபட தோஷம் நீங்குவதாக நம்பிக்கை.
சுற்றிலும் தண்ணீர், மலைகள் சூழ அமைந்த அழகிய தலம் இது. கோயில் அமைந்துள்ள குன்று "சக்தி மலை' எனப்படுகிறது. இதற்கு இடப்புறத்தில் "சிவன் மலை' உள்ளது. அதாவது சிவன், அம்பாளுக்கு நடுவே முருகன் "சோமாஸ்கந்த' வடிவில் இங்கு கோயில் கொண்டிருக்கிறார். முருகன் சன்னதிக்கு வலப்புறம் சுந்தரேசுவரர், இடப்புறம் மீனாட்சியம்மனுக்கும் சன்னதி இருக்கிறது.

No comments:
Post a Comment