Saturday, January 19, 2013

பிரானூர்


பிரானூர்:


To view the English Translation , see below the Tamil version

பிரானூர் திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்தில் இருக்கும் ஒரு ஊர் ஆகும். இது தென்காசி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ளது.
குற்றாலத்திலிருந்து செங்கோட்டை செல்லும் வழியில் 5 கி.மீ. தொலைவில் இருக்கும் இவ்வூர் பிரானூர் பார்டர் எனவும் வழங்கப்படுகிறது. அதன் காரணம் இந்த இடம்தான் 1956ம் ஆண்டு மொழி வாரியாக மாநிலங்கள் பிரிக்கப்படும் வரை இது கேரளாவுக்கும், தமிழ்நாட்டுக்கும் எல்லையாக இருந்தது. அப்போது இருந்த காலகட்டத்தில் இங்கு சுங்கவரி சோதனைச்சாவடி இருந்ததால் இவ்வூருக்கு பார்டர் எனும் பெயர் வழக்கு சொல்லாக வந்தது.

இவ்வூர் இரு மாநில எல்லை பகுதியாக இருந்ததால் போக்குவரத்து வாகன ஓட்டிகள் வாகனங்களை நிறுத்தி மாலை உணவகங்களில் பரோட்டா சாப்பிட்டு ஓய்வெடுத்து செல்வது வழக்கம். பிரானூர் பார்டரில் அமைந்துள்ள ஹோட்டல் என்பதால் பார்டர் கடை என்றே அழைக்கப்படுகின்றது ஹோட்டல். இந்த ஹோட்டல் முழுக்க அசைவப் பிரியர்களுக்கானது. இங்கு தயாரிக்கப்படும் பரோட்டா-க்கு தனி சுவை என்றும் கூறுவார்கள். மேலும் குற்றாலம் வரும் சுற்றுலா பயணிகளையும் கவர்ந்து உள்ளது இங்கு உள்ள இந்த ஹோட்டல்.
இவ்வூரில் சிறப்பு வாய்ந்த தீப்பாச்சி அம்மன் கோயில் உள்ளது. பிரசித்தி பெற்று விளங்கும் தீப்பாய்ச்சி மாரியம்மன் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் தை மாதத்தில் 10 நாட்கள் கோயில்கொடை எனப்படும் திருவிழா சிறப்பாக நடைபெறும். விழாவினை காண செங்கோட்டை, புளியரை, வல்லம், தென்காசி, குற்றாலம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

இவ்வூரில் உள்ள பல மர அறுவைஆலைகள், வெளிநாட்டிலிருந்து பெரிய மரத்தடிகளை இறக்குமதி செய்து தேவைப்படும் அளவுகளில் அறுப்பு செய்யும் தொழில் நடத்துவதால் சுற்று வட்டார மக்களுக்கு வேலைவாய்பை அளிக்கின்றது.

இந்த ஊரில் தான் எஸ்.கோமதிநாயகம் பிறந்தவர் . 1983ம் ஆண்டு வக்கீலாக பதிவு செய்தார். அரசு குற்றவியல் வக்கீல், சிறப்பு அரசு குற்றவியல் வக்கீல், சிறப்பு அரசு பிளீடர் பதவிகளை வகித்தவர். மத்திய அரசு கூடுதல் வக்கீலாகவும் பணியாற்றினார். ஐகோர்ட், சுப்ரீம் கோர்ட்டில் பல வழக்குகளில் இவர் ஆஜராகியுள்ளார் என்பது கூறிப்பிடத்தக்கது.

----

Piranoor:

Piranoor is a Panchayat Village of Tenkasi Block and Shenkottai Taluk in Tirunelveli district . It is located in the foothills of the Western Ghats. Up to 1956, this area was a toll gate between the states of Kerala and Tamilnadu, so this area is known as Border.

It is located roughly 5 kilometres from the Courtallam Waterfall, near the border with Kerala. The Harihara and Kuntaaru rivers flow between Shenkottai and this village.

The major industry in this village is by log bucking at sawmills. This area is also famous for evening parotta stalls. The touristists who visit Courtallam never missed this parotta stalls.

S. Komatinayakam was born in this piranur village, Recorded in 1983 as a lawyer. He is also have the title as criminal lawyer, specializing in criminal defense, pilitar special government positions. In addition to serving as the lawyer. He took part in many cases in the Supreme Court and High Court.

No comments:

Post a Comment