தேசிய நூலக வார விழா:
----------------------------------
பொதுமக்களிடம் நூலகத்தை பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்த ஒவ்வொரு ஆண்டும் தேசிய நூலக வார விழா கொண்டாடப்படுகிறது. 45–வது தேசிய நூலக வார விழா நேற்று தொடங்கியது. இதையொட்டி பாளையங்கோட்டை மாவட்ட மைய நூலகத்தில் நூலக கண்காட்சி நேற்று தொடங்கியது.
இதன் தொடக்க விழா நிகழ்ச்சிக்கு வாசகர் வட்ட தலைவர் அ.மரியசூசை தலைமை தாங்கினார். மாவட்ட நூலக அலுவலர் க.மந்திரம், இந்திய செஞ்சிலுவைச் சங்க செயலாளர் டி.ஏ.பிரபாகர், க.வெங்கடாசலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வாசகர் வட்டச் செயலாளர் கோ.கணபதி சுப்பிரமணியன் வரவேற்று பேசினார். நிகழ்ச்சியில், நெல்லை மாநகராட்சி துணை மேயர் கணேசன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, கண்காட்சியை தொடங்கி வைத்தார்.
நுழைவு தேர்வுக்கான புத்தகங்கள்
கண்காட்சியில், பொது அறிவு புத்தகங்கள், தந்தை பெரியார் வாழ்க்கை வரலாறு, பேரறிஞர் அண்ணா நாடகங்கள், சுதந்திர போராட்ட வரலாறு, டி.என்.பி.எஸ்.சி., கிராம நிர்வாக அலுவலர் தேர்வுக்கான புத்தகங்கள், பிளஸ்–2 மாணவ, மாணவிகளுக்கு நுழைவு தேர்வுக்கான புத்தகங்கள், அறிவியல் புத்தகங்கள், கதை, சிறு கதை புத்தகங்கள் உள்பட பல்வேறு புத்தகங்கள் வைக்கப்பட்டு உள்ளன. நிகழ்ச்சியில் வைலட், ரேவதி, கண்ணுப்பிள்ளை, கணபதியப்பன், சந்திர பாபு உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில், நூலகர் அ.முத்துகிருஷ்ணன் நன்றி கூறினார்.
நிறைவு விழா
மைய நூலகத்தில் வருகிற 16–ந் தேதி மகளிர் தின விழா நடைபெறுகிறது. 17–ந் தேதி பிற்பகல் 3 மணிக்கு நிறைவு விழா நடைபெறுகிறது. விழாவையொட்டி அன்று பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நூலகத்தை பற்றிய கட்டுரைப்போட்டிகள் நடத்தப்படுகின்றன. நிறைவு விழா நிகழ்ச்சியில் அமைச்சர் செந்தூர் பாண்டியன், தமிழ்நாடு வீட்டு வசதிவாரிய தலைவர் முருகையா பாண்டியன், நெல்லை மாநகராட்சி மேயர் விஜிலா சத்யானந்த் உள்பட பலர் கலந்து கொள்கிறார்கள்.

No comments:
Post a Comment