குற்றாலம் ஐந்தருவி அருகே ரூ.3 கோடியில், சூரிய ஒளியில் இருந்து மின்சாரம் உற்பத்தி மையம்:
சோலார் மின் உற்பத்தி
-------------------------------
தமிழகத்தில் தற்போது மின் பற்றாக்குறை அதிகமாக உள்ளது. இதனால் பொதுமக்கள் மிகுந்த பாதிப்படைந்து உள்ளனர். வர்த்தகர்கள், தொழிற்சாலை நடத்துபவர்கள், அரசு அலுவலர்கள், பள்ளி மாணவ மாணவிகள் உள்பட அனைத்து தரப்பினரும், அவதிப்படுகின்றனர். இந்த நிலையை சமாளிக்க சோலார் (சூரிய ஒளி) மின் உற்பத்தியை ஏற்பாடு செய்யலாம் என்று அரசு அறிவித்துள்ளது.இதனை கருத்தில் கொண்டு, குற்றாலம் ஐந்தருவி அருகே இலஞ்சி நகர பஞ்சாயத்துக்கு சொந்தமான 2 ஏக்கர் இடத்தில் சூரியசக்தி மின்உற்பத்தி மையம் அமைக்கப்படுகிறது. இந்த மின் உற்பத்தி மையம் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்து பொது மக்களுக்கு வினியோகம் செய்ய இலஞ்சி நகர பஞ்சாயத்து நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
அதிகாரிகள் ஆய்வு
--------------------------
சூரிய மின் உற்பத்தி மையம் அமைய இருக்கும் இடத்தை பெங்களூரில் இருந்து வந்திருந்த சோலார் மின் உற்பத்தி நிறுவன அதிகாரிகள் ஆய்வு செய்தனர். ஆய்வின் போது, நகர பஞ்சாயத்து தலைவர் காத்தவராயன், துணைத் தலைவர் ராமச்சந்திரன், நிர்வாக அதிகாரி எம்.எஸ்.சுப்பிரமணியன் ஆகியோர் உடனிருந்தனர்.
இதுகுறித்து நகர பஞ்சாயத்து தலைவர் காத்தவராயன் கூறியதாவது:–
இந்த திட்டத்தின்படி 500 கிலோவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும். இதற்கு ரூ.3 கோடி செலவாகும். இலஞ்சி நகர பஞ்சாயத்து பகுதிக்கு 50 கிலோவாட் மின்சாரம் தான் தேவைப்படுகிறது. இந்த திட்டம் நிறைவேற்றப்படும்போது இலஞ்சி நகர பஞ்சாயத்து பகுதி பொதுமக்களுக்கு 24 மணி நேரமும் தடையின்றி மின்சாரம் வழங்க முடியும்.இவ்வாறு நகர பஞ்சாயத்து தலைவர் காத்தவராயன் கூறினார்.

No comments:
Post a Comment