Wednesday, January 16, 2013

உவரி


 September 17, 2012





உவரி சுமார் நெல்லையில் இருந்து 75 கி.மீ. தூரத்தில் உள்ள கடலோர கிராமம் ஆகும். திருநெல்வேலி மாவட்டத்தில் சுற்றுலாப்பயணிகள் பெரும் அளவில் வந்து செல்லும் அழகிய இடம் இது. இங்கு வாழும் மக்களின் முக்கிய தொழில் மீன்பிடி தொழிலாகும் . உவரி - Uvari என்றவுடன் நம் அனைவர் நினைவிற்கு வருவது அங்கே கடற்கரை ஓரம் அழகாக விற்றிருந்து அருள் பாவித்துகொண்டிருக்கும் சிவபெருமான் ஸ்ரீ சுயம்பு லிங்க சுவாமியும், கப்பல் மாதா தேவாலயமும் தான்.

சுயம்புலிங்க சுவாமி திருக்கோயில்:

உவரியில் இறைவன் சுயம்பு லிங்கோத்பவராக உள்ளார். இங்குள்ள மூலவர் சுயம்புநாதர், தாயார் பிரம்பசக்தி. இங்குள்ள சிறப்பு
சூரியன் தன் பொற்கரங்களால் இறைவனை இத்தலத்தில் ஆராதிப்பதே ஆகும் . மார்கழி மாதம் 30 நாளும் சுயம்பு லிங்கத்தின் மேல் சூரிய ஒளி படும். வேறு சில ஆலயங்களில் இது போல் சூரிய ஒளி லிங்கத்தின் மேல் விழுவதுண்டு என்றாலும் அங்கெல்லாம் ஒருநாள் இருநாள் மட்டுமே விழும். மாதத்தின் முப்பது நாளும் முழுமையாக சிவலிங்கத்தின் மீது மேல் சூரிய ஒளிபடுவது உலகிலேயே இங்கு மட்டும்தான். கடல் ஓரத்தில் 4 ஊற்றுகள் உள்ளன. இவை அனைத்தும் நல்ல தண்ணீர் ஊற்றுகள். சுவாமியின் அபிஷேகத் தண்ணீர் இது என்பது மற்றொரு அதிசயம்.

கப்பல் மாதா தேவாலயம்

உவரியின் அடுத்த சிறப்பு கப்பல் மாதா தேவாலயம்.
கோவாவைச் சேர்ந்த இறையியல் திருச்சபையின் கட்டுப்பாட்டில் இது உள்ளது. கடந்த 1903 ஆம் ஆண்டு இந்தத் தேவாலயம் ஒரு பள்ளியாக மாற்றப்பட்டுள்ளது. இங்குள்ள கன்னிகா மடத்தில் சென்று இரவில் தங்கும் இளம் பக்தைகளுக்கு அங்குள்ள மாதாவைச் சுற்றி ஓர் ஒளிவட்டம் தெரிவதாக் கூறப்படுகிறது. ஆனால் ஓரு மெழுகுவர்த்தி கூட இந்த ஆலயத்தில் ஏற்றப்படுவதில்லை என்பதுதான் ஆச்சர்யம்.

உவரி என்ற சொலிருக்கு சேற்றுநீர்க் குழி என்ற பொருளும் உண்டு. இவை அனைத்தையும் இங்கே நாங்கள் சொல்வதை விட நீங்களே உவரிக்கு வந்து தெரிந்து கொள்ளுங்கள் நண்பர்களே !!!
Like ·  · Share · Edit


No comments:

Post a Comment