Thursday, January 17, 2013

25 விரல்களுடன் வலம் வரும் 4 வயது சிறுவன்:


25 விரல்களுடன் வலம் வரும் 4 வயது சிறுவன்:

இயற்கையை மிஞ்சி கை, கால்களில் விரல்களை கொண்ட சிறுவன் மத்திய பிரதேசம் போபாலில் வளர்ந்து வருகிறான்.

அர்பன் சக்சேனா என்ற பெயருடைய இந்த சிறுவன் பிறக்கும் போதே இயற்கைக்கும் அதிகமான முறையில் அவனுடைய கை, கால்களில் விரல்களின் எண்ணிக்கை கூடுதலாக இருந்ததாக அவனது அம்மா தருணா தெரிவிக்கிறார்.

இச்சிறுவனின் இடது கையில் 6 விரல்கள் இருக்கிறது. அதிலும் பெரு விரல்கள் இரண்டு இரண்டாக இரு கைகளிலும் ஒட்டியிருக்கிறது.

இது தவிர வலது கையில் குட்டியாக ஒரு விரலும் இருக்கிறது. இதே போல் அவனுடைய இரு கால்களிலும் 6 விரல்கள் கணக்கில் 12 விரல்கள் இருக்கின்றன.

இது குறித்து அச்சிறுவன், தன்னை மற்றவர்கள் புகைப்படம் எடுக்கும் போது சந்தோசமாக இருக்கிறது என்றும் ஆனால் ஷு போடக்கூட தன்னால் முடியவில்லை என தெரிவித்தான்.

No comments:

Post a Comment