Monday, December 10, 2012

தபால்துறையில்


தபால்துறையில் போஸ்டல் அசிஸ்டென்ட் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது இதற்கு விண்ணப்பிக்க வரும் அக்டோபர் 1ம் தேதி கடைசி நாளாகும். தபால் துறையில் போஸ்டல் அசிஸ்டென்ட், சார்டிங் அசிஸ்டென்ட், போஸ்டல் அசிஸ்ட
ென்ட் (ரிட்டர்னிங் லெட்டர் ஆபீஸ்), போஸ்டல் அசிஸ்டென்ட் (மெயில் மோட்டார் சர்வீஸ்), போஸ்டல் அசிஸ்டென்ட் (பாரின் போஸ்ட் ஆர்கனைசேஷன்), போஸ்டல் அசிஸ்டென்ட் (எஸ்பிசிஒ) ஆகிய பிரிவுகளில் மொத்தம் 621 காலியிடங்களுக்கு ஆட்கள் தேர்வுசெய்யப்பட உள்ளனர்.

வயதுவரம்பு: 01.10.2012 தேதிப்படி 18 -லிருந்து 27-க்குள் இருக்க வேண்டும். எஸ்சிஎஸ்டி பிரிவுக்கு 5 ஆண்டுகள் வரையும், இதர பிற்படுத்தப்பட்டவகுப்பினருக்கு 3 ஆண்டுகள் வரையும் வயது வரம்பில் சலுகை உண்டு.

கல்வித்தகுதி: பொதுப்பிரிவினர் பன்னிரெண்டாம் வகுப்பில் 60 சதவிகித மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். OBC பிரிவினர் 55சதவிகித மதிப்பெண்களும், SC/ST பிரிவினர் 45 சதவிகித மதிப்பெண்களும் எடுத்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் 10, 12ம் வகுப்பில் பெற்ற மதிப்பெண், எழுத்து தேர்வு மதிப்பெண், கம்ப்யூட்டர் டைப்பிங் டெஸ்ட் அடிப்படையில் ஆட்கள் தேர்வு செய்யப்படுவர். விண்ணப்ப படிவ கட்டணம் ரூ.50. விண்ணப்பங்கள் வினியோகம் ஆகஸ்ட் 11ம் தேதி முதல் செப்டம்பர் 25ம் தேதி வரை நடைபெறும்.

விண்ணப்ப கட்டணம் ரூ.200. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஒப்படைக்க வரும் அக்டோபர் 1ம் தேதி கடைசிநாள் ஆகும். தேர்வர்கள் இது தொடர்பான மேலும் விவரங்களை www.indiapost.gov.in என்ற இணையதளத்தில் காணலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை

‘டைரக்ட் ரெக்ரூட்மென்ட் செல், நியூடெல்லி எச்ஒ, நியூடெல்லி 110001 என்ற முகவரிக்கு விரைவு தபால் அல்லது பதிவு தபால் மூலம் அனுப்பி வைக்க வேண்டும்.

Address:
Direct Recruitment Cell, New Delhi HO, New Delhi -11000

No comments:

Post a Comment