Monday, December 10, 2012

தென்பாண்டி நாடு ( திருநெல்வேலி சீமை )


தென்பாண்டி நாடு ( திருநெல்வேலி சீமை )

சூரியனின் ஒளி மங்கிய வேளையில் கொற்கை துறைமுகத்தை ஒர் அரபுக்கப்பலின் உதவியால் அலைகள் வந்து முட்டியது.. அலைகள் முன்னால் வர பின்னால் மிகவும் பிரமாண்டமான அரபுக்கப்பல் வந்து நின்றது... கொற்கை துறைமுகத்தில் இருந்த பாண்டிய நாட்டு காப்பாளர்கள் சுறுப்படைந்தனர். காப்பாளர்களுக்கு அரபுக்கப்பல்களை பார்ப்பது இது புதுசில்லை.. வருடத்திற்கு இருநூறுக்கு அதிகமான அரபுக்கப்பல்களை
 பார்த்துக்கொண்டுத்தான் இருக்கிறார்கள்.. கப்பல்களிலிருந்து படகுகள் இறக்கப்பட்டு கூட்ட கூட்டமாய் அரபியர்கள் இறங்கினர்.. படகுகள் காற்றை கிழித்துக்கொண்டு கரையை நோக்கி வந்துக்கொண்டிருந்தது.. பாண்டிய நாட்டு காப்பாளர்கள் விளக்குகளை உயர்த்தி பிடித்து கொண்டிருந்தனர்.. பாதிபேர் விறகுகளை அள்ளிக்கொண்டுப்போய் கலங்கரை விளக்கத்திற்கு நெருப்பு மூட்டிட்டு வந்தனர். படகு கரையை தட்டியதும் மிதமிஞ்சிய அரக்கு கலர் உடுப்பு அணிந்த ஒருவன் முதன்முதலில் இறங்கவும் பின்னால் இருந்தவர்கள் ஆரவாரம் இட்டனர். இறங்கியவுடன் கை இரண்டையும் மேலே தூக்கி , முளங்கால் படியிட்டு இறைவனை தூதித்தான்.. பின்னர் அவனுடன் வந்தவர்கள் அனைவரும் இறங்கினர். பாண்டிய நாட்டு காப்பாளர்களுக்கு அதிசயமாக இருந்தது. இதுவரை அரபியர்கள் பெண்பிள்ளைகளை கூட்டிட்டு வந்ததில்லை. இப்பொழுது பெண் பிள்ளைகளும் சிறு குழந்தைகளும் வந்திருந்தனர். காப்பாளர்களில் அரபு தெரிந்த ஒருவன் முன்னால் போய் அவர்களை வணங்கி வரவேற்றான். பின்னால் திரும்பி தனது காப்பாளர்களிடம் ஏதோ சொல்ல அவர்கள் பதினாறு படகுகளை எடுத்துக்கொண்டு மறுபடியும் கப்பலை நோக்கி விரைந்தனர். பின்னர் ஒரு பதிவேடு புத்தகத்தில் அவர்கள் பெயர்கள் பதிவு செய்யப்பட்டன. அவர்களது தலைவனின் பெயரான கான்சாப்கி முதன்முதலில் எழுதப்பட்டு பின்னர் வரிசையாக எல்லார் பெயரும் எழுதப்பட்டது. மொத்தம் நான்கு குடும்பங்களாக( அடிமைகள் சேர்த்து ) மொத்தம் 246 பேர் கொற்கை காயலை அடைந்த ஆண்டு கிபி 721..

பழைய ஏற்பாடு காலத்திலிருந்தே பாண்டிய நாட்டுக்கும் அயல் நாட்டுக்கும் வாணிகம் சிறப்பாக நடந்தது. கிமு 1000 ம் ஆண்டில் சிரியாவை ஆட்சிபுரிந்த சாலமோன் ராஜா அரண்மனைக்கு பாண்டிய நாட்டு முத்துக்கள் அனுப்பப்பட்டன. முத்துகள் மட்டுமல்ல வாசனை திரவியங்களான மிளகு, கிராம்பு, பட்டைகளும் சென்றுக்கொண்டிருந்தன.. அதன் பொருட்டு மேற்கு நாடுகளுக்கு பாண்டிய நாடு என்பது மிக அண்டை நாடுப்போல அதிகம் வந்துக்கொண்டிருந்தனர். அப்பொழுது பாண்டிய நாடானது கொற்கையைத்தலமையிடமாக கொண்டு செயல்பட்டு வந்தது.

கிபி 721 க்கு முன்னரே பல அரபியர்கள் தங்கள் மதத்தை பரப்புவதற்காக தமிழகத்தை அடைந்துள்ளனர். இஸ்லாம் மார்க்கத்தை நபிகள் தோற்றுவித்தவுடனயே அம்மதம் கீழை நாடுகளுக்கு பரவத்தொடங்கியது. கிபி 721 க்கு பின்னரே நிரந்தர குடியிருப்புக்காக தமிழகத்துக்கு வருகை புரிந்தனர்.

இவ்வாறு அரபு முஸ்லீம்கள் குடியேறுவதற்காக முதன்முதலில் கட்டமைத்த ஊர் திருசெந்தூர் அருகில் உள்ள காயல்பட்டினம்.. பின்னர் காயல்பட்டினத்திலிருந்துதான் தமிழகத்தின் பிற பகுதிகளுக்கு இஸ்லாம் பரவத்தொடங்கியது.

மேலும் பரவும்...

No comments:

Post a Comment