Monday, December 10, 2012

காசி விஸ்வநாதர் ஆலயம்-தென்காசி


காசி விஸ்வநாதர் ஆலயம்-தென்காசி


திருநெல்வேலி மாவட்டத்தில் சுமார் 50 கி.மீ. தொலைவில்உள்ளது தென்காசி. தென்காசி ஆலயத்தில் இறைவன் விஸ்வநாதர் என்ற திருப்பெயரிலும் இறைவி உலகம்மன் என்ற திருப்பெயரிலும் அருள்பாலிக்கிறாவடக்கே வாரணாசியில் உள்ள காசி வி
ஸ்வநாதர் ஆலயம் போல் தெற்க்கே உள்ளது தென்காசியில் இந்த காசி விஸ்வநாதர் கோவில்.


சிவ பக்தரான மன்னர் காசியில் உள்ளது போலவே இங்கும் ஒருகோவில்வேண்டும் என்று எண்ணி எழுபப்பிய கோவில் தான் இது.தென்காசி விஸ்வநாதர் கோயிலைக் கட்டி முடிக்க ஆறு ஆண்டுகள் பிடித்து உள்ளன.கோபுரத்திற்கு வெளியில் காற்று ஒரு திசையிலும் கோபுரத்திற்கு உள்புறம் காற்று எதிர் திசையிலும் அடிக்கும் அதிசயத்தை இங்கு காணலாம்.ஆங்கிலத்தில் crosswind draft என்று கூறுவார்களே அந்த முறையில் கோபுரம் அமைந்துள்ளது.வெளி பிரகாரத்தில் கங்கை கிணறு உள்ளது.

மகா மண்டபம், அர்த்த மண்டபம், கோபுரம், கருவறை, விமானம் இப்படி அத்தனையும் பாங்குற வடிவமைத்துக் கோயிலை எழுப்பினான். இறைவன் சந்நிதி அருகில் உள்ளது திருவோலக்க மண்டபம். இம்மண்டபத்தில் அற்புத வேலைப்பாடுகள் கொண்ட அக்னி வீரபத்திரர், ரதிதேவி, மகாதாண்டவம், ஊர்த்துவ தாண்டவம், காளி தேவி, மகாவிஷ்ணு, மன்மதன், வீரபத்திரர், பத்து கன்னியர் ஆகிய சிலைகள் உள்ளன. இவற்றின் விசேஷம்-அனைத்தும் தனிக் கல்லால் வடிக்கப்பட்டுள்ளன. பாண்டியர் கால சிற்ப வேலைப்பாட்டின் சிறப்பை உலகிற்குப் பறைசாற்றும் வண்ணம் அமைந்துள்ளது.

No comments:

Post a Comment