இன்றாவது நமது இளைய தலைமுறை அந்த வீர இளைஞனைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டாமா? வாருங்கள் வாஞ்சிநாதனை பற்றி அறிவோம் .....
சுதந்திரப் போராட்டத்தில் தமிழகத்தின் பங்கு கணிசமானது. தமிழகத்தில் சுதந்திரத் தீயை மக்கள் மத்தியில் வளர்த்த செம்மல்கள

ில் வீரன் வாஞ்சிநாத'னுக்கும் முக்கிய இடம் உண்டு.
நெல்லை அருகே உள்ள செங்கோட்டையில், 1886-ம் ஆண்டு ரகுபதி ஐயர்- ருக்மணி தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார், சங்கரன் இவரது இயற்பெயர்.
இவர் சிறு வயதில் வாஞ்சி, வ.உ.சிதம்பரம், சுப்ரமணிய சிவா போன்ற தலைவர்களின் பேச்சால் கவரப்பட்டார். இதனால் சுதந்திர உணர்வானது அவரது இளம் குருதியில் இயல்பாக ஊறியது
தனது கல்லூரிப் படிப்பை திருவனந்தபுரத்தில் முடித்தார். இதன் பிறகு புனலூர் வனத்துறையில் அவருக்கு வேலை கிடைத்தது.
ஆங்கிலேயர்களின் கொடுங்கோல் ஆட்சிமுறை, வாஞ்சிநாதனின் மனதை சுதந்திரப் போரின் பக்கம் திருப்பியது.
புதுச்சேரில் இருந்த பிரெஞ்சு அரசு உதவ, ஆங்கிலேயருக்கு எதிராக வாஞ்சியின் போராட்டத்திற்கு பக்க பலமாக இருந்தது. தனது சுதந்திரத் தாகத்திற்கு இடையூறாக இருந்த அரசுப் பணியை உதறித் தள்ளி, முழுமூச்சாக ஆங்கிலேயர்களுக்கு எதிராக களமிறங்கினார் வாஞ்சி.
தான் மிகவும் போற்றிவந்த வ.உ.சி., சுப்ரமணிய சிவா ஆகியோரை, நெல்லை கலெக்டர் ராபர்ட் வில்லியம் டி எஸ்கார்ட் ஆஷ் துரை கைது செய்து சிறையில் தள்ளினார்.இச்சம்பவம் வாஞ்சியின் மனதை புரட்டிப் போட்டது.
அவர், இதற்கு காரணமான ஆஷ் துரையை பழிவாங்க உறுதி பூண்டார். அவரை கொலை செய்வதற்கான நாளையும் எதிர்பார்த்துக் காத்திருந்தார்.
1911 ஜூன் 17 ஆம் தேதி காலை மணியாச்சி ரயில் நிலையத்தில் இருந்து கலெக்டர் ஆஷ் துரை தனது குடும்பத்தாருடன் கொடைக்கானலுக்குச் புறப்படத் தயாராக இருந்தார்.
முதல் வகுப்புப் பெட்டியில் களிப்புடன் அமர்ந்திருந்தார் கலெக்டர் ஆஷ். யாரும் எதிர்பாராதவகையில் ரயில் பெட்டிக்குள் நுழைந்து, திட்டமிட்டபடி கலெக்டர் ஆஷை வாஞ்சிநாதன் சுட்டுக் கொன்றார்.
ஆங்கிலேய அதிகாரிகள் வாஞ்சியை சூழ்ந்து கொண்டனர். எதிரிகளின் கையில் சிக்கி உயிரை விடுவதைவிட, தானே தன் உயிரைப் போக்கிக் கொள்வது மேல் என்று கருதிய வாஞ்சி, நொடிப் பொழுதையும் வீணடிக்காமல் அதே துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு, வீர மரணம் எய்தினார்.
சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாழ்க்கை வரலாற்றை இன்றைய மாணவ சமுதாயம் தெரிந்து கொள்ளும் வகையில் அனைத்து வகுப்புகளிலும் பாடத் திட்டத்தில் சேர்க்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்தச் செயலைச் செய்த வாஞ்சிநாதனின்
பெருமையை பாராட்டும் வகையில் மணியாச்சி ரயில் நிலையத்துக்கு அவன் பெயரை வைக்க வேண்டுமென்று நாடாளுமன்றத்திலும் பாடுபட்டு, இறுதியில் மணியாச்சி என்ற பெயரோடு வாஞ்சியின் பெயரையும் சேர்த்து வாஞ்சி மணியாச்சி என்று பெயரிடப்பட்டது

No comments:
Post a Comment