செய்திகள் ⇒ மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதி
♥ நெல்லை மாவட்டத்தின் வளம் மிக்க பகுதியும், கேரளா எல்லையுமான கடையநல்லூர், மேக்கரை, செங்கோட்டை, குற்றாலம், பழைய குற்றாலம், கடையம், மத்தளம் பறை பகுதிகளில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிய

ில் ஈத்தல் என்றழைக்கப்படும் மூங்கில் தொடர்ந்து வெட்டப்படுவதால் நீர்பிடிப்பு குறைவதுடன், யானைகள் ஊருக்குள் நுழையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
♥ தமிழக-கேரள மாநிலங்களுக்கு பாதுகாப்பு அரணாக விளங்கி வரும் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதி அரிய வகை மிருகஙகளையும், மரங்களையும், மூலிகைச் செடிகளையும் கொண்ட இயற்கை வளம் மிக்க பகுதியாகும். இங்கு யானை, சிறுத்தை, மிளா, காட்டுப்பன்றி போன்ற மிருகங்கள் ஆயிரக்கணக்கில் உள்ளன. மேலும் பறக்கும் அணில் போன்ற அபூர்வ வகை அணில்களும், பலதரப்பட்ட பறவைகளும் உள்ளன. ஏராளமான அருவிகளும், நதிகளும் கொண்ட மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதி இயற்கை நமக்கு தந்த விலை மதிக்க முடியாத பொக்கிஷமாகும். ஆனால் சமீபகாலமாக மேக்கரை, செங்கோட்டை மற்றும் கடையநல்லூர் பகுதிகளில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் இயற்கை வளம் திட்டமிட்டு அழிக்கப்பட்டு வருகிறது.
♥ பல மாநிலங்களில் காடுகளின் பரப்பளவு 33 சதவீதம் இருந்து வரும் நிலையில் தமிழகத்தில் காடுகளின் பரப்பளவு மளமளவென குறைந்து தற்போது 18 சதவீதமாக உள்ளதாக இயற்கை மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
♥ செங்கோட்டை, மேக்கரை, கடையநல்லூர் பகுதியில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மூங்கில் அதிகம் வளர்ந்துள்ளது. அங்கு வளரும் மூங்கில்கள் ஜவுளிக் கடை பைகளுக்கு கைப்பிடியாகப் பயன்படுத்தப்படுகிறது.
இதன் காரணமாக அங்குள்ள மூங்கில்களுக்கு சென்னை, கோவை, திருச்சி போன்ற பெருநகரங்களில் மட்டுமின்றி பிற மாநிலங்களில் இருந்தும் ஆர்டர் குவிந்த வண்ணம் உள்ளது. இதனால் செங்கோட்டை, கடையநல்லூர் பகுதியில் மூங்கில் அதிக அளவுக்கு வெட்டப்பட்டு செங்கோட்டை பகுதிகளிலேயே சைஸ் செய்யப்பட்டு தமிழகத்தின் பல பகுதிகளுக்கும், பிற மாநிலங்களுக்கும் தொடர்ந்து அனுப்பப்பட்டு வருகிறது. தினந்தோறும் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள மூங்கில் வெட்டப்பட்டு அனுப்பப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
♥ இந்நிலையில் தற்போது தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால் ஜவுளிக் கடை பைகளுக்கு பயன்படும் இந்த மூங்கில்களின் தேவை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக காடுகளில் வளர்ந்துள்ள மூங்கில்கள் அதிக அளவில் வெட்டப்படுகிறது. இதனால் கடையநல்லூர் பகுதியில் தண்ணீர் மற்றும் உணவு தேடி யானைகள் கூட்டம் கூட்டமாக வந்து மலையடிவாரங்களில் உள்ள தென்னை, வாழை தோட்டங்களை அழித்து வருகிறது.
♥ இதனால் மேற்குத் தொடர்ச்சி மலை வனப்பகுதி அழிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment