Monday, December 10, 2012

கூந்தங்குளம் - பறவைகள் சரணாலயம்


கூந்தங்குளம் - பறவைகள் சரணாலயம்


கூந்தங்குளம் உலகின் முக்கிய பறவை சரணாலயங்களில் ஒன்று.

திருநெல்வேலியில் இருந்து சுமார்35 கி.மீ தூரத்தில், 129.33 ஏக்கர் நிலபரப்பில்
அமைந்துள்ளது . இங்கு 230க்கும் மேற்பட்ட பறவைகள் இங்கு வந்து கூடு கட்டுவதாக பறவையியல் அறிஞர்கள் கணக்கெடுத்துள்ளனர்.

43 வகையான நீர்ப்பறவைகள், செந்நிற நீண்ட கால்களையும், மெல்லியதாக நீண்டு வளைந்த கழுத்தையும், ரோஜா வண்ணத்தையும் ஒத்த பூ நாரைகள் தவிர சைபீரியா பகுதியில் இருந்து நாரை, மஞ்சள் மூக்கு நாரை, மூன்று வித கொக்குகள் கரண்டி வாயள், வாத்து வகைகள் என வண்ணக்கலவையாக கூந்தன்குளத்திற்கு அழகு சேர்க்கிறது.ஓர் ஆண்டில் அதிகபட்சமாக 1 லட்சம் பறவைகள் வந்தது பதிவு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு வலசை வந்து ஜூன் ஜூலை மாதம் வரை தங்கி குஞ்சு பொரித்து பிறகு அவற்றுடன் பறந்து செல்கின்றன. மிக முக்கியமான பறவைகள் சரணாலயமாக இது இருந்து வருகிறது.

மேலும், கூந்தன்குளம் கிராம மக்களின் பாதுகாப்பில் பறவைகள் யாவும் மனிதர் பயம் இன்றி அனைத்து வீடுகளிலும் கூடு கட்டுவது சிறப்பம்சமாகும்.

No comments:

Post a Comment