Wednesday, January 16, 2013

நவராத்திரி எட்டாம் நாள் - வழிபடும் முறை !!


நவராத்திரி எட்டாம் நாள் - வழிபடும் முறை !!


இன்று அன்னையை நரசிம்ஹி ஆக வழிபடவேண்டும். மனித உடலும், சிம்ம தலையும் உடையவள். கூரிய நகங்களுடன் சங்கு, சக்கர தாரிணியாக சிம்ம வாகனத்தில் காட்சி தருபவள். சத்ருக்கள் தொல்லையில் இருந்து விடுபட அன்னையின் அருள்வேண்டும்.



நைவேத்தியம் : சர்க்கரைப் பொங்கல்.

தூவ வேண்டிய மலர்கள்: முல்லை மலர்களால் ஆன மாலை அணிவித்தும், வெண் தாமரை மலர்களால் அர்ச்சிக்கலாம்

நரசிம்ஹி ஆக அன்னையை வழிபடும் போது இந்த ஸ்லோகத்தை சொல்லி வழிபடலாம்:


புத்தகத் துள்ளுறை மாதே! பூவில் அமர்ந்துறை வாழ்வே! வித்தகப் பெண்பிள்ளை நங்காய்! வேதப் பொருளுக்கிறைவி! எக்காலும் உன்னைத் தொழுவோம் எழுத்தறி புத்தி பண்ணுவிப்பாய்!

No comments:

Post a Comment