Thursday, January 17, 2013

தொடரும் தாமிரபரணி....


தொடரும் தாமிரபரணி....

தாமிரபரணி ஆற்றின் கிளையாறுகளில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது சேர்வலாறு, மற்றொன்று பாபநாசம் அணை. ஏறத்தாள 3 மைல் தூரம் மலையை குடைந்து குகை வாயிலாக இந்த இரண்டு அணைகளை இணைத்துள்ளனர். இது ஒரு குகைப் பாதை. பாபநாசத்தில் இருந்து 75 மைல் அல்லது 120 கிலோ மீட்டர்தூரம் ஓடும் தாமிரபரணி மன்னார் வளைகுடாவில் புன்னக்காயல் என்னும் இடத்தில் இந்து மகா சமுத்திரத்தில் கலக்கிறது.

தாமிரபரணியில் 8 குறு அணைக்கட்டுகள் உள்ளது. அவை கோடை மேலழகியான் அணைக்கட்டு, நதியுண்ணி அணைக்கட்டு, கன்னடியன் அணைக்கட்டு, பழவுர் அணைக்கட்டு, அரியநாயகிபுரம் அணைக்கட்டு, மருதுhர் அணைக்கட்டு, திருவைகுண்டம் அணைக்கட்டு ஆகியவை அகும். இந்த அணைக்கட்டுகளில் 11 கால்வாய்கள் உள்ளது.

கல்லிடைகுறிச்சிக்கு 2 மைல் மேற்கே கன்னடியன் அணையுடன் மணிமுத்தாறு நதி வந்து கலக்கிறது. ராம நதியும், கடனா நதியுடன் சேர்ந்து அது கடனா நதியாக திருப்புடைமருதுரில் இடப்பக்கம் கலக்கிறது. இவை யாவும் தாமிரபரணி சமவெளி பகுதியில் கலக்கும் நதிகள்.

No comments:

Post a Comment