கொற்கை கிராமம்:
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள கொற்கை கிராமம் இன்று நாம் பார்ப்பதற்கு மிகச்சாதாரண கிராமமாக தெரியலாம். ஆனால் முன்னொரு காலத்தில் இந்த கொற்கைதான் தமிழகத்தின் மிக முக்கிய துறைமுகமாக விளங்கியுள்ளது. என்ன வியப்பாக இருக்கிறதா! ஆம் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் பாண்டியர்கள் ஆட்சி காலத்தில் கொற்கையில் இருந்து கடல் வழி வாணிபம் மிகவும் சிறப்பாக நடந்து இருக்கிறது என்பதற்கு பல சான்றுகள் இன்றும் உள்ளது. பாண்டிய மன்னன் பொற்கை பாண்டியனின் நினைவாக இவ்வூருக்கு பொற்கை என்றே பெயர் இருந்தது. அது காலப் போக்கில் கொற்கை என்று மருவியதாக கூறப்படுகிறது.
இப்போது இருக்கும் கொற்கை கிராமம் வரை முன்பு கடல் இருந்து இருக்கிறது. கொற்கை முன்பு துறைமுகமாக இருந்தாலும், பின்னர் இயற்கை மாறுபட்டால் கடல் சுமார் 6 கி.மீ பின்னோக்கி சென்றுவிட்டது. முன்பு, கொற்கை பக்கமாக தாமிரபரணி பாய்ந்து கொண்டிருந்ததாம். ஆறு வழியாக, கடலுக்கு பாதை. இன்று ஆறும் இல்லை. கடலும் இல்லை.இன்றும் இந்த ஊரில் 10 அடி தோண்டினால் கடல் சங்குகள் கிடைப்பதாக இவ்வூர் மக்கள் கூறுகிறார்கள். இங்கு பசுமை வாய்ந்த மரங்களுடன் சுமார் 150 ஏக்கர் பரப்பளவில் பெரிய குளம் உள்ளது. இந்த குளத்தின் நடுவே பழமை வாய்ந்த கண்ணகி கோவில் உள்ளது. இந்த கோவிலை பாண்டிய மன்னன் செழியனின் தம்பி வெற்றிவேல் செழியன் கட்டியதாக கூறப்படுகிறது. இந்த கோவிலின் உள் பகுதி கருங்கல்லால் கட்டப்பட்டு உள்ளது. அவற்றில் மீன் சின்னங்களும் பொறிக்கப்பட்டு உள்ளன.
அந்த காலத்தில் போருக்கு செல்லும் மன்னர்கள் இந்த கோவிலுக்கு சென்று வணங்கி விட்டுதான் செல்வார்களாம். நாளடைவில் இக்கோவிலும் வெற்றிவேல் அம்மன் கோவில் என்று அழைக்கப்படலாயிற்று. இங்குள்ள குளத்துக்கு எதிரே வாழைத்தோட்டத்தின் நடுவில் பாண்டிய மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்ட பழமையான கொற்கை அக்காசாலை ஸ்ரீஈஸ்வரமுடையார் திருக்கோவில் விநாயகர் ஆலயமும் உள்ளது. இந்த கோவிலைச் சுற்றிலும் ஏராளமான கல்வெட்டுகள் உள்ளன.
இந்த ஊரின் நடுவே சுமார் 2 ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்த வன்னி மரம் ஒன்று உள்ளது. இந்த வன்னி மரத்தை இந்த கிராம மக்கள் இன்றும் தெய்வமாக வழிபடுகின்றார்கள். சில ஆண்டுகளுக்கு முன் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் இங்கு ஆய்வு செய்தபோது பழங்கால தமிழர்கள் பயன்படுத்திய அம்பு, வில், பானை, தாழிகள், சங்குகள், சிப்பிகள் ஆகியன கிடைத்தன. அவை தற்போது நெல்லையில் உள்ள அருட்காட்சியகத்தில் வைக்கப்பட்டு உள்ளது. இத்தகைய பெருமை வாய்ந்த கொற்கை கிராமத்துக்கு தூத்துக்குடியில் இருந்து பழைய காயல் வழியாகவும் நெல்லையில் இருந்து ஏரல் வழியாகவும் வரலாம்.

No comments:
Post a Comment