Wednesday, January 16, 2013

சிற்பங்களின் இருபிடமான கழுகுமலை


சிற்பங்களின் இருபிடமான கழுகுமலை:

கழுகுமலை மதுரை-திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில், கோவில்பட்டியில் இருந்து, 20 கி.மீ., தூரத்தில் உள்ளது. இங்குள்ள சிற்பங்கள் மிகவும் சிறப்பாகவும் ரசிபதற்கு ஏதுவாகவும் இருக்கும். இந்த ஊர் மிகப்பெரிய வரலாற்றை தம்மில் அடக்கி வைத்துள்ளது. வாருங்கள் கழுகுமலை தனிசிறப்புகளை பற்றி காண்போம் !!!

இங்கு முன்று முக்கிய இடங்கள் உள்ளன:

1. முருகன் கோயில்
மிகவும் பழமையான பழைய முருகன் கோயில்களிள் இதுவும் ஒன்று. இதன் மூலவர் இருக்கின்ற இடமும் ஒரு குடைவரைதான். இந்தக் கோவிலின் தெப்பக் குளத்தில், பால் போன்ற நிறத்தில் நல்ல குடிநீர் கிடைக்கிறது. அதுதான், இந்த ஊர் மக்களின் குடிநீராக, அண்மைக்காலம் வரையிலும் பயன்பட்டு வந்தது. எனவே, அந்தக் குளத்தைத் தூய்மையாகப் பராமரித்து வருகிறார்கள். இப்போது, தாமிரபரணி ஆற்றில் இருந்து குடிநீர் கொண்டு வருகிற திட்டம் செயல்படுத்தப்பட்டு உள்ளது.அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு அடுத்த பெரும் பேறு பெறுவது கழுகுமலை என்றால் மிகையல்ல. தமிழ்நாட்டில் உள்ள மிகச் சிறந்த சுற்றுலாத் தளமும் ஆகும்.

2. சமணர் பள்ளி -
சமணர்களின் சிற்பக் கலைத்திறனுக்குச் சிறந்த உதாரணம் இங்குள்ள கோயில்தான்.மலையின் நடுவே ஓரிடத்தில், வரிசையாகப் பல சிலைகள் செதுக்கப்பட்டு உள்ளன. சமணர்கள் தங்கள் குரு, தாய், தந்தை, மகள் ஆகியோரின் நினைவாக இங்கு தீர்த்தங்கரர் சிற்பங்களை உருவாக்கியுள்ளனர். இச்சிற்பங்களின் கீழே அவற்றை உருவாக்கியவரின் பெயர் வட்டெழுத்தில் பொரிக்கப்பட்டுள்ளது. இங்கு சமணசித்தாந்தம் போதிக்கபட்டது. இச்சிற்பங்கள் பாண்டிய மன்னன் பராந்தக நெடுஞ்சடையன் காலத்தில் தோற்றுவிக்கபட்டவை.

3. வெட்டுவான் கோயில் - பாறையை வெட்டி அமைக்கப்படும் கோயில் வெட்டுமானக் கோயில் என்று அழைக்கப்படுகின்றது. பாண்டிய மன்னர்களால் எட்டாம் நூற்றாண்டில் ஒரே பறையில் கட்டப்பட்ட கலை நயம் மிக்க கோவில் இதுவாகும். பெரிய மலைபாறையில் ஏறக்குறைய 7.5 மீட்டர் ஆழத்திற்கு சதுரமாக வெட்டிஎடுத்து அதன் நடுபுறத்தை கோயிலாக செதுக்கியுள்ளனர்.

No comments:

Post a Comment