Wednesday, January 16, 2013

பாளையங்கோட்டை


பாளையங்கோட்டை:

பாளையங்கோட்டை திருநெல்வேலி மாநகராட்சியில் முக்கியமான நகரம் ஆகும். இந்த நகரம் தாமிரபரணி ஆற்றின் கிழக்கு கரையில் அமைந்துள்ளது. நாயக்கன் காலத்தில் படைத்தலைவராக விளங்கிய அரியநாத முதலியார் கட்டிய கோட்டையில் பாளையங்கள் (படை) தங்கி இருந்தததால் இவ்வூர் பாளையங்கோட்டை என்று அழைக்கப்படுகிறது. முதலில் பாளையம்கோட்டை தனி நகராட்சியாக இருந்தது. பின்னர்தான் அது திருநெல்வேலியுடன் இணைந்தது.

இவ்விடம் கல்வி நிறுவனங்களுக்கு மிகவும் புகழ் பெற்றது. அதனால் தான், இதனை தென்னிந்தியாவின் ஆக்ஸ்போர்டு என்று அழைக்கபடுகிறது . நமக்கு சுதந்திரம் கிடைக்கும் முன்பே இங்கு பல கல்வி நிலையங்கள் இருந்திருகின்றன. திருநெல்வேலி மாவட்டத்தின் முக்கிய பள்ளிகள், கல்லூரிகள் இங்குதான் உள்ளன. அரசு மருத்துவ கல்லூரி, அரசு சித்தமருத்துவ கல்லூரி, அரசு பொறியியல் கல்லூரி, செயின்ட் சேவியர் கல்லூரி, செயின்ட் ஜான்ஸ் கல்லூரி, சாராடெக்கர் கல்லூரி ஆகியவை பாளையங்கோட்டையில் உள்ள கல்லூரிகள் ஆகும் .இங்குள்ள அண்ணா மைதானம், வ.உ.சி மைதானம் ஆகிய இடத்தில் முக்கியமான விளையாட்டு போட்டிகள் நடைபெறும்.

இங்கு பல முக்கியமான தேவாலயங்கள் உள்ளன. இங்குள்ள ஹோலி டிரினிடி கதீட்ரல் சர்ச் தென்னிந்தியாவின் முக்கிய திருச்சபையாகும். கோபாலசுவாமி கோயில் , சிவன் கோயில், ராமர் கோயில், போன்று பல கோவில்கள் இவ்விடத்தில் இருக்கின்றன. பாளையங்கோட்டை மத்திய சிறைச்சாலை மிகவும் புகழ்பெற்றதாகும் . அங்குதான் பாரதியார் போன்ற சுதந்திர போராட்ட தியாகிகள் பலர் அடைக்கப்பட்டிருந்தனர்...

No comments:

Post a Comment