Wednesday, January 16, 2013

நவராத்திரி ஐந்தாம் நாள் - வழிபடும் முறை !!


நவராத்திரி ஐந்தாம் நாள் - வழிபடும் முறை !!

ஐந்தாம் நாளில் அன்னையை மகேஸ்வரி தேவியாக வழிபட வேண்டும். அன்னை மகேஸ்வரனின் சக்தியாவாள். திரிசூலம், பிறைச்சந்திரன், பாம்பு தரித்து இடப வாகனத்தில் எழுந்தருளியிருப்பவள். அளக்கமுடியாத பெரும் சரீரம் உடையவள். சர்வ மங்களம் தருபவள். தர்மத்தின் திருவுருவம். கடின உழைப்பாளிகள் உழைப்பின் முழுப்பலனை பெற அன்னையின் அருள் அவசியம் வேண்டும்.


நைவேத்தியம் :- புளியோதரை.

தூவ வேண்டிய மலர்கள்: செவ்வரளி மலர் மாலை

மகேஸ்வரி தேவியாக அன்னையை வழிபடும் போது இந்த ஸ்லோகத்தை சொல்லி வழிபடலாம்:


கீர்தேவதேதி கருடத்வஜ ஸூந்தரீதி சாகம்பரீதி சசி சேகர வல்லபேதி ஸ்ருஷ்டி ஸ்திதி ப்ரளய கேளிஷூ ஸம்ஸ்திதாயை தஸ்யை நமஸ் த்ரிபுவனைக குரோஸ் தருண்யை

- ஸ்ரீஆதிசங்கரர் அருளிய கனகதாரா ஸ்தோத்திரம்

பொருள்: சரஸ்வதிதேவி என்றும், கருட வாகனனின் மனைவியாகிய மகாலட்சுமி என்றும், சாகம்பரியாகிய பூமாதேவி என்றும் பார்வதி என்றும் பிரசித்தி பெற்று, படைத்தல்- காத்தல்- ஒடுக்கல் ஆகிய விளையாட்டான காரியங்களில் அமர்ந்தவளும், மூன்று உலகங்களுக்கும் குருவாகத் திகழும் ஸ்ரீமந் நாராயணனுடைய பத்தினியானவளுமான ஸ்ரீமகாலட்சுமிக்கு நமஸ்காரம்.

No comments:

Post a Comment