எட்டயபுரம் சுப்ரமணிய பாரதியார் வீட்டுக்கு செல்வோம்.. வாருங்கள்
எட்டயபுரத்தின் இயற்பெயர் இளச நாடு என்பதாகும். பாண்டிய மன்னர்கள் வசம் இருந்த இப்பகுதி பின்னர் எட்டப்பனைப் பாளையக்காரனாகக் கொண்டிருந்தது. எட்டப்பன் வழித்தோன்றல்களின் ஏறத்தாழ 150 ஆண்டு கால ஆட்சியின் காரணமாக இவ்வூரின் பெயர் எட்டயபுரம் என்று வழங்கலாயிற்று. இவ்எட்டயபுரத்தில் தான் பெண் விடுதலைக்காகவும், நாட்டின் விடுதலைக்காகவும் பாடுபட்ட முண்டாசு கவிஞன் பாரதி பிறந்தார். பாரதி பிறந்த வீடு தற்போது தமிழக அரசால் சீர்செய்யப்பட்டு பொதுமக்கள் பார்வைக்கு விடப்பட்டுள்ளது.
பாட்டுக்கொரு புலவன் சுப்பிரமணிய பாரதிக்கு அவர் பிறந்த எட்டயபுரத்தில் கல்கி கிருஷ்ண மூர்த்தியால் நினைவு இல்லம் கட்டப்பட்டு 1945 - ம் ஆண்டு திறக்கப்பட்டது. 1981-ம் ஆண்டு பாரதியாரின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது. மேலும் இங்கு உமறுபுலவருக்கும் நினைவு மணி மண்டபம் உள்ளது. மேலும் பாரதி பிறந்த எட்டயபுரத்தில் அவருக்காக மணிமண்டபமும் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மைய மண்டபத்தில் மகாகவி பாரதியின் ஏழு அடி உயர திருவுருவச்சிலை அமைக்கப்பட்டு 11-12-1999 அன்று பஞ்சாப் மாநில முதல்வர் தர்பாராசிங் அவர்களால் திறந்துவைக்கப்பட்டது. 25 சதுர அடி பரப்பளவில் 1000 நபர்கள் அமரக்கூடிய அளவில் திறந்தவெளிக் கலையரங்கம் உள்ளது. இங்கு பாரதியின் வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படக் கண்காட்சியும் வைக்கப்பட்டுள்ளது.
பாரதி தனது 11-ம் வயதில் பள்ளியில் படித்து வரும்பொழுதே கவிபுனையும் ஆற்றலை வெளிப்படுத்தினார். 1897 ஆம் ஆண்டு செல்லம்மாளை மணந்தார். 1898 ஆம் ஆண்டு தொழிலில் ஏற்படும் நஷ்டத்தினால் வறுமை நிலையினை அடைந்தார். இதனை எட்டையபுரம் மன்னருக்குத் தெரிவித்து பொருளுதவி வழங்குமாறு கடிதத்தில் கேட்டுக்கொள்கின்றார். பின்னர் எட்டையபுரம் அரண்மனையில் பணி கிடைத்தது. சிறிது காலங்களிலேயே அப்பணியை விடுத்து காசிக்குச் செல்கின்றார். 1898 முதல் 1902 வரை காசியில் தங்கி இருந்தார். பின்னர் எட்டையபுரத்தின் மன்னனால் அழைத்து வரப்பட்டு காசி அரண்மனை ஒன்றினில் பாரதி வாழ்ந்தார்.
இவ்வாறு ஏழு வருடங்கள் பாட்டெழுதாமல் இருந்த பாரதி 1904 ஆம் ஆண்டு மதுரையில் அவர் எழுதும் பாடல் 'விவேகபானு' இதழில் வெளியாகின்றது. வாழ்நாள் முழுதும் பல்வேறு தருணங்களில் பத்திரிகை ஆசிரியராகவும் மதுரையில் சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகவும் பணியாற்றியுள்ளார். அவர் தனது வாழ்வின் பல கட்டங்களில் எட்டயபுரத்து பாளையக்காரரால் ஆதரிக்கப்பட்டார். சுப்பிரமணிய பாரதியார் தமிழ், இந்தி, சமஸ்கிருதம்,மற்றும் வங்காள மொழி ஆகியவற்றில் புலமை பெற்றவர். பிற மொழி இலக்கியங்களை மொழி பெயர்க்கவும் செய்துள்ளார்.
சிறப்பாகத் தமிழன் பாரதியாரின் கண்ணில் பட்டாலும், மனிதன் என்ற வகையிலேதான், பாரதியார் அவனைப் பார்த்தார். தமிழன் என்பதற்குப் பதிலாக, எந்த நாட்டினுடைய பெயரைக் கொடுத்தாலும், பாரதியாரின் கவிதை, அந்த நாட்டுக்கும் பொருத்தமுள்ளதாக இருக்கும். எனவே, அவர் சர்வதேசக் கவி; அதாவது உலக மகாகவி. இந்த ஸ்தானம் அவருடைய கவிதைக்குக் கிடைக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.
எந்த நாட்டானும் தனது என்று கொஞ்சிப் பாராட்டக்கூடிய பாரதியாரின் கவிதையைப்பற்றி சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை!!!
தமிழகத்தில் முதலில் பெண்ணுரிமையைப் பேசியது பாரதியாகத்தான் அவர் பிறந்த வீட்டையும், நூல்களையும், மணி மண்டபத்தையும் பார்வை இடும் வாய்ப்பு கிடைத்தாலே பாக்கியம் எனலாம். பாரதியாரைப் போற்றும் ஒவ்வொருவரும் கண்டிப்பாக ஒரு முறை இங்கு சென்று வர வேண்டும். அவர் உலாவிய தரையையும் சாய்ந்த சுவர்களையும் தொட்டுப்பார்ப்பது ஒரு சிலிர்ப்பான அனுபவம்! தமிழன் தலைநிமிர்ந்து நடக்கும்படியாக, அவனை ஆண்மகனாக ஆக்கிய பெருமை, பெரும்பான்மையில் பாரதியாரைச் சேர்ந்ததாகும்.
வாழிய செந்தமிழ் ! வாழ்க நற்றமிழர் !!
வாழிய பாரத மணித்திரு நாடு !!!
வந்தே மாதரம்.

No comments:
Post a Comment