Wednesday, January 16, 2013

நவராத்திரி ஆறாம் நாள் - வழிபடும் முறை !!


நவராத்திரி ஆறாம் நாள் - வழிபடும் முறை !!

இன்று அன்னையை கவுமாரி தேவியாக வழிபடவேண்டும். மயில் வாகனமும் சேவல் கொடியும் உடையவள். தேவசேனாதிபதியான முருகனின் வீரத்திற்கு ஆதாரமானவள். ஓங்கார சொரூபமானவள். சகல பாவங்களையும் விலக்கிடுபவள். வீரத்தை தருபவள்.


நைவேத்தியம் :- தேங்காய்ச்சாதம்.

தூவ வேண்டிய மலர்கள்: செந்தாமரை, செம்பருத்தி, ரோஜா

கவுமாரி தேவியாக அன்னையை வழிபடும் போது இந்த ஸ்லோகத்தை சொல்லி வழிபடலாம்:

ஸேவே தேவி த்ரிதச மஹிளா மௌளிமாலார்ச்சிதம் தே ஸித்திக்ஷேத்ரம் சமிதவிபதாம் ஸம்பதாம் பாதபத்மம் யஸ்மின்னீஷந்நமிதசிரஸோ யாபயித்வா சரீரம் வர்த்திஷ்யந்தே விதமஸி பதே வாஸூதேவஸ்ய தன்யா:

- ஸ்ரீவேதாந்த தேசிகர் அருளிய ஸ்ரீஸ்துதி

கருத்து: தேவியே... தேவப் பெண்களின் சிரசுகளின் வரிசைகளால் அர்ச்சிக்கப் பட்டதும், குறையில்லா ஐஸ்வரியங்களுக்கு உற்பத்தி ஸ்தானமுமாகிய தங்களின் பாதக் கமலத்தில் தலை வணங்கியவர்களும், பாக்கியம் பெற்றவராக சரீரம் விலகிய பின் வைகுண்டத்தில் நித்யவாசம் செய்வார்களோ... அந்த பாத கமலத்தை சேவிக்கிறேன்.

No comments:

Post a Comment