நாம் இன்று தோத்தாத்ரிநாதன் திருக்கோயில் பற்றி காண்போமா....
இக்கோவில் நாங்குனேரி உள்ளது. இத்தலம் நான்கு ஏரிகளால் சூழப்பட்டதால் நாங்குனேரி ஆனது.பெருமாளின் 108 திருப்பதிகளுள் இதுவும் ஒன்று. இங்கு எழுந்தருளியுள்ள இறைவன் பெயர் தெய்வநாதன், வானமாமலை(தோத்தாத்ரிநாதர்), தாயார் பெயர் வரமங்கை தாயார்.
இத்தலத்தில் மூலஸ்தானத்திலுள்ள தோத்தாத்ரிநாதர், ஸ்ரீதேவி, பூதேவி, சூரியன், சந்திரன், பிருகுரிஷி, மார்க்கண்டேயர், ஊர்வசி, திலோத்தமை ஆகிய ஒன்பது பேரும், அர்த்தமண்டபத்திலுள்ள கருடாழ்வாரும், விஷ்வக்சேனரும் ஆக11 பேர் சுயம்பு மூர்த்திகளாக உள்ளனர். இத்தகைய அமைப்பு இங்கு மட்டுமே உள்ளது.
இங்குள்ள தாயாரின் உற்சவர் சிலை முதலில் திருப்பதியில் தான் இருந்ததாம். அங்குள்ளவர்கள் திருவேங்கடப் பெருமாளுக்கு ஸ்ரீவரமங்காதேவியை கல்யாணம் செய்ய இருந்தனர். அப்போது பெரிய ஜீயரின் கனவில் பெருமாள் தோன்றி, "" இவள் நாங்குநேரியிலுள்ள வானமாமலைப் பெருமாளுக்காக இருப்பவள்,'' என கூறியதால் இத்தலத்திற்கு வந்து விட்டாள்.
மது,கைடபன் என்ற இரு அரக்கர்களை மகாவிஷ்ணு அழித்த போது, அரக்கர்களின் துர்நாற்றம் பூமியெங்கும் வீசியது. பூமாதேவி தன் இயல்பான தூய்மையை இழந்ததால் மிகவும் வருந்தினாள். இத்தலத்தில் தவமிருந்து, விஷ்ணுவின் அருள் பெற்றாள். "மாசு கழுவப்பெற்றாய்' என்று சொல்லி, வைகுண்டத்தில் வீற்றிருப்பது போலவே இங்கும் வைகுண்ட விமானத்தில் பூமாதேவிக்கு காட்சி கொடுத்ததாக தல வரலாறு கூறுகிறது.மூலவரின் மேல் உள்ள விமானம் நந்தவர்த்தன விமானம் ஆகும்.

No comments:
Post a Comment