நவராத்திரி இரண்டாம் நாள் :-
இரண்டாம் நாளில் அன்னையை வராஹி தேவியாக கருதி வழிபட வேண்டும். வராஹ(பன்றி) முகமும் தெத்துபற்களும் உடையவள். சூலமும் உலக்கையும் ஆயுதங்கள் ஆகும். பெரிய சக்கரத்தை தாங்கியிருப்பவள். தனது தெத்து பற்களால் பூமியை தூக்கியிருப்பவள். இவளிற்கு மங்கள மய நாராயணி, தண்டினி, பகளாமுகி போன்ற திருநாமங்களும் உண்டு. இவள் அன்னையின் சேனாதிபதி ஆவாள். ஏவல், பில்லி சூனியம், எதிரிகள் தொல்லையிலிருந்து விடுபட இவளின் அருளைப் பெறுவது அவசியம்.
மதுரை மீனாட்சி அம்மன் இன்று விறகு விற்ற லீலையில் காட்சி அளிப்பாள். அதாவது சுந்தரர் விற்ற விறகை மீனாட்சி அம்மன் தலையில் ஏற்றும் படலம் நடக்கும். குடும்ப பாரத்தை கணவனுடன் சேர்ந்து மனைவியும் சுமக்க வேண்டும் என்ற தத்துவத்தினை வலியுறுத்துவதாக நாம் கருதலாம். இந்த நாளில் 3 வயதுள்ள பெண் குழந்தையை, 'திரிமூர்த்தி' யாக பாவித்து வழிபடுவது நலம். இதனால் தன-தானியங்கள் பெருகும்.
நைவேத்தியம் :- தயிர்ச்சாதம்.
தூவ வேண்டிய மலர்கள்: முல்லை , சிவப்பு நிறக் கொன்றை
அன்னையை 'திரிமூர்த்தி' ஆக வழிபடும் போது இந்த ஸ்துதியினை சொல்லி வழிபடலாம்:
எனது இன்னல் இன்னபடி என்று வேறு ஒருவர்க்கு இசைத்திடவும் அவர்கள் கேட்டில் இன்னல் தீர்த்து உள்ளத்து இரங்கி நன்மைகள் செயவும் எள்ளளவும் முடியாதுநின் உனது அம்மருவும் கடைக்கண்ணருள் சிறிது செயின் உதவாத நுண் மணல்களும் ஓங்கு மாற்று உயர் சொர்ண மலையாகும் அதுவன்றி உயர் அகில புவனங்களைக் கனமுடன் அளித்து முப்பத்திரண்டு அறங்களும் கவின் பெறச் செய்யும் நின்னைக் கருது நல் அடியவர்க்கு எளி வந்து சடுதியில் காத்து ரட்சித்தது ஓர்ந்து வனச நிகர் நின் பாதம் நம்பினேன் வந்தருள்செய்! வளர் திருக் கடவூரில் வாழ் வாமி! சுபநேமி! புகழ்நாமி! சிவசாமி மகிழ் வாமி! அபிராமி! உமையே
- அபிராமி அந்தாதி

No comments:
Post a Comment