இம்மாதம் முதல் வரும் 3 மாதங்கள் வரை வானில் வியாழன், சனி, வெள்ளி உள்ளிட்ட கோள்களும் அதன் துணைக்கோள்களும் துல்லியமாக தெரியும். இக்கோள்கலை நெல்லை மாவட்ட அறிவியல் மையத்தில் உள்ள தொலைநோக்கி மூலம் நாம் காணலாம். அதற்காக சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பொதுமக்களுக்கு தொலை நோக்கி மூலம் விண் வெளியை காட்ட மாவட்ட அறிவியல் மையத்தினர் தீர்மானித்தனர்.
இதுகுறித்து அறிவியல் மைய கல்வி அலுவலர் மாரி லெனின் கூறுகையில், ‘இன்னும் 3 மாதங்கள் அந்தியில் கிழக்கில் வியாழன் தெளிவாக தெரி யும். தொலைநோக்கி மூலம் பார்த்தால் அதன் துணை கோள்களாக அயோ, ஈரோப்பா, கனிமீட், கலிஸ்டோ ஆகிய துணைக்கோள்கள் நான்கும் தெரியும். வியாழனின் மேலும் கீழுமாக அவை தோன்றும் காட்சி அற்புத மாக இருக்கும். அதேபோல் அதிகாலை சூர்யோதயத்துக்கு முன்பு சனி நன்கு புலப்படும். வரும் சனி, ஞாயிறுதோறும் வானம் தெளிந்திருந்தால் மாலை 6.30 முதல் 7.30 வரை அறிவியல் மையத்தில் தொலைநோக்கி மூலம் கோள்களை பார்க்கலாம்’ என்றார்.
TAG: District Science Centre, Tirunelveli

No comments:
Post a Comment