நவராத்திரி நான்காம் நாள் - வழிபடும் முறை !!
சக்தித்தாயை இன்று வைஷ்ணவி தேவியாக வழிபடவேண்டும். தீயவற்றை சம்ஹரிப்பவள். இவளின் வாகனம் கருடன். அம்பிகையின் கைகளில் இருந்து பிறந்தவள் வைஷ்ணவி. இவள் விஷ்ணுவின் அம்சம். வளமான வாழ்வு தருபவர். சகல சவுபாக்கியங்கள்,செல்வ வளம் அனைத்தையும் தருபவளே வைஷ்ணவி. குறிப்பாக தங்கம் அளவின்றி கிடைத்திட வைஷ்ணவி வழிபாடு மிக அவசியமாகும்.
விஷ்ணுவின் சக்தியான இவர் நீல நிறமானவர். ஆறு கரங்களைக் கொண்டிருப்பார். வலது கரங்களில் ஒன்று வரத முத்திரையிலிருக்கும். மற்றைய கரங்களில் கதா, தாமரை என்பன காணப்படும். இடது கரங்களில் ஒன்று அபய முத்திரையினைக் காட்டுவதாகவும் மற்றையன சங்கு, சக்கரம் ஏந்தியவாறும் காணப்படும். வைஷ்ணவி அழகிய கண்களையும், முகத்தினையும் கொண்டிருப்பார். மஞ்சள் ஆடை அணிந்திருப்பார். விஷ்ணுவிற்குரிய ஆபரணங்களை அணிந்து கருடனை வாகனமாகவும் கொடியாகவும் கொண்டிருப்பார்.
நைவேத்தியம் :- எலுமிச்சை சாதம்.
தூவ வேண்டிய மலர்கள்: செந்நிற மலர்களால்
வைஷ்ணவியாக அன்னையை வழிபடும் போது இந்த ஸ்லோகத்தை சொல்லி வழிபடலாம்:
தத்யாத் தயானு பவனோ த்ரவிணாம்புதாராம் அஸ்மின்ன கிஞ்சன விஹங்கசிசௌவிஷண்ணே துஷ்கர்ம கர்மம் அபநீய சிராய தூரம் நாராயண ப்ரணயினீ நயனாம்பு வாஹ:
- ஸ்ரீஆதிசங்கரர் அருளிய கனகதாரா ஸ்தோத்திரம்
பொருள்: கருணையாகிய அனுகூலக் காற்றுடன் கூடிய மகாலட்சுமி யின் கண்களாகிய நீருண்ட மேகம்... தரித்திரத்தால் கஷ்டப்படும் இந்த ஏழையான சிறிய சாதகப் பறவையிடம், வெகு நாட்களாக ஏற்பட்ட பாவம் எனும் தாபம் போக்கி, பொருள் மழையை அருளட்டும்.

No comments:
Post a Comment