Saturday, January 19, 2013

உச்சிஷ்ட கணபதி


உச்சிஷ்ட கணபதி

திருநெல்வேலியில் உள்ள இக்கோவிலின் வரலாறு நம்மில் எத்தனை பேருக்கு தெரியும் !!

திருநெல்வேலி சந்திப்பில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில், பை-பாஸ் சாலையை கடந்து சென்றால் இக்கோவிலை சென்றடையலாம்.
விநாயர் பெருமானின் வடிவங்களில் ஒன்று தான் '
உச்சிஷ்ட கணபதி' . திருநெல்வேலியில் கணபதியை மூலவராகக் கொண்டுள்ள 'உச்சிஷ்ட கணபதி கோயில்' தான் ஆசியாவிலேயே மிகப்பெரிய விநாயகர் கோவில் ஆகும். கோவிலை பற்றி சிறிது தகவல்களை காண்போம்.

கோவிலின் அமைப்பு:

ஐந்து நிலை ராஜகோபுரத்துடன் அமைந்த கோயில் இது. கருவறையில், அம்பாளை மடியில் தாங்கி, பக்தர்களுக்கு அருள்பாலித்துக் கொண்டிருக்கும் `உச்சிஷ்ட கணபதி' நமக்கும் தரிசனம் தருகிறார். `உச்சிஷ்ட கணபதி' என்ற திருநாமம் இருந்தாலும், `மூர்த்தி விநாயகர்' என்றே இவர் அழைக்கப்படுகிறார்.பிள்ளையாருடன் வீற்றிருக்கும் அம்பாள், "ஸ்ரீநீலாவாணி'' என்று அழைக்கப்படுகிறார்.

மும்மூர்த்திகளைவிட முதன்மையான கடவுளாக விநாயகப் பெருமான் விளங்குவதால், அவரது மடியில் இருக்கும் அம்பாளும் முப்பெரும் தேவியரின் அம்சமாக கருதப்படுகிறார். இவரது பெயரில் `ஸ்ரீ' என்பது லட்சுமியையும், `நீலா' என்பது துர்க்கையையும் குறிக்கிறது. கலைவாணியை கூறும் வகையில் `வாணி' என்ற பெயரும் இந்த அம்மனுடன் இணைந்துள்ளது.

இங்குள்ள இறைவனை வணங்கினால் குழந்தையில்லாதவர்களுக்கு குழந்தை பிறக்கும் என்பது ஐதீகம்.

No comments:

Post a Comment