குறுக்குத்துறை :
நெல்லை நகரத்தின் சிறப்புகளில் இந்தக் குறுக்குத்துறை முருகனுக்கு ஒரு தனியிடம் உண்டு. காலருகில் ஓடும் தாமிரபரணியின் சலசலப்பில் வள்ளி தெய்வானையுடன் சுகமாக வீற்றிருக்கும் முருகப்பெருமான், பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார் . இங்கு உள்ள முருகன் சிலை திருஉருவ மலை எனும் பாறையில் இருந்து 1653 ஆம் ஆண்டு செந்தூர்க் கோயிலுக்காக வடிக்கப்பட்டது. திருச்செந்தூர் கோவிலுக்காக செய்த சிலையினை டச்சுக்காரர்கள் திருடி கொண்டு செல்லும் போது அச்சிலை நடுக்கடலில் முழ்கி விட்டது. இதனால் வடமலையப்ப பிள்ளை என்பவர் புதிய சிலையை செய்தார். இதற்கிடையில் நடுக்கடலில் முழ்கிய சிலை கிடைக்கப்பெற்றது. முதலில் திருச்செந்தூர் கோவிலுக்கு செய்த முருகன் சிலையினை செந்தூர் கோவிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டது. புதிதாக உருவாக்கப்பட்ட சிலையினை குறுக்குத்துறை கோவிலில் பிரதிஷ்டை செய்தனர். எனவே திருச்செந்தூர் முருகனுக்கு வேண்டிக்கொண்டவர்கள் குறுக்குத்துறையில் அந்த வேண்டுதலை நிறைவேற்றுவார்களாம்.
அந்த காலத்தில் வீட்டில் பல்விளக்க ஆரம்பிச்சு, குறுக்குத்துறை தாமிரபரணியில் வந்து வாய்கொப்பளிச்சு, கல்மண்டபத்திலிருந்து குதித்து நீச்சலடித்து,ஆழத்திலிருக்கும் அல்லியைக் பறித்துவந்து,ஈரம் காயாம முருகனைக் கும்பிட்டவர்கள் பலர் இருகின்றனர். இன்னும் குறுக்குத்துறையின் இயற்கை எழிலும் மாலை மயங்கிய பொழுதும், ஓடும் நீரின் மெல்லிய இசையும், கோயிலில் இருந்து எழுந்த தெள்ளிய மணியோசையும் மனதில் மிகவும் ரம்யமான உணர்வை ஏற்படுத்தும். படித்துறையில் உட்கார்ந்து கால்களைக் கொஞ்சும் மீன்களோடு விளையாடிக்கொண்டிருந்தால் வீட்டுக்குக்கிளம்ப மனசே வராது.

No comments:
Post a Comment